புதிய பேருந்துகள் வாங்க நடவடிக்கை: போக்குவரத்து அமைச்சர் ராஜ கண்ணப்பன்
எந்த வெள்ளம் வந்தாலும் அதை சமாளிக்க தமிழக அரசு முழு அளவில் தயாராக இருக்கிறது என்றார் அமைச்சர் ராஜகண்ணப்பன்
போக்குவரத்து துறையில் பழைய பேருந்துகள் பயன்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் புதிய பேருந்துகள் வாங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள சென்னையிலிருந்து மதுரை விமான நிலையம் வந்தடைந்த போக்குவரத்து துறை ராஜகண்ணப்பன் செய்தியாளர்களிடம் மேலும் கூறுகையில்: போக்குவரத்து துறையில் சீர்படுத்தும் பணி நடைபெற்று வருவதாகவும்., தமிழக முதல்வரின் ஆலோசனைப்படி, கடந்த ஆறு மாத காலமாக போக்குவரத்து துறையை ஒழுங்குபடுத்தி நல்லமுறையில் செயல்படுகிறது. போக்குவரத்து ஆணையரின் தலைமையில் நிர்வாகம் நல்லமுறையில் செயல்பட்டு வருகிறது.
அது குறித்து ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ராமநாதபுரம் செல்வதாகவும், தமிழக அரசு துரிதமாக செயல்படுவதாக தெரிவித்தார். சென்னையில் வெள்ள பாதிப்பில் பேருந்துகள் பாதிப்படையவில்லை. தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது. எந்த வெள்ளம் வந்தாலும் எதிர் கொள்ள அரசு தயாராக உள்ளது.
புதிய பேருந்துகள் வாங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பேருந்து பழுது பார்க்க நிதி உதவி கேட்டுள்ளது. பழைய பேருந்துகள் மிக விரைவில் சரி செய்யப்படும். ஏற்கெனவே., உள்ள பழைய பேருந்துகள் பயன்படுத்துவதால் சிரமும் ஏற்பட்டுள்ளது. இன்னும் இரண்டு மூன்று மாதத்திற்குள் சீரமைக்கப்பட்ட பேருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவோம் என்றார் அமைச்சர் ராஜகண்ணப்பன்.