ஏற்குடி அச்சம்பத்து ஊராட்சியில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்
திருப்பரங்குன்றம் அருகே ஏற்குடி அச்சம்பத்தில் பகுதியில், கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது.;
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா, திருப்பரங்குன்றம் அருகே உள்ள ஏர்குடி அச்சம்பத்து ஊராட்சியில், கொரானா இல்லாத மதுரை உருவாக்குவோம் என்ற திட்டத்தின் கீழ், இன்ற் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
இதில், திருப்பரங்குன்றம் வட்டார மருத்துவர் சிவக்குமார் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தங்கசாமி மற்றும் அச்சம்பத்து ஊராட்சி மன்றத் தலைவர் முத்துலட்சுமி இருளப்பன், துணைத் தலைவர் வனிதா சுரேந்திரன் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இதில், 200-க்கும் மேற்பட்டோர் களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. முன்னதாக, தடுப்பூசி போட வந்தவர்களுக்கு சாமியானா பந்தல் அமைத்து சமூக இடைவெளியுடன் தடுப்பூசி போடப்பட்டது.