மதுரை அரசுப் பள்ளியில் டாக்டர் அப்துல் கலாம் நினைவு நாள் அனுசரிப்பு

கலாம் பற்றிய பேச்சு, கட்டுரை, ஓவியம், பொன்மொழிகள், கவிதை முதலிய போட்டிகள் நடைபெற்றன;

Update: 2023-07-28 09:30 GMT

மதுரையில் பள்ளியில், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நினைவு தினம் அனுசரிப்பு.






பிறந்த  தினம்.

மதுரை எல்.கே.பி. நகர் பள்ளியில், அப்துல் கலாம் அவர்களின் நினைவு தினம் மதுரை கிழக்கு வட்டார கல்வி அலுவலர் ஜான்சி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் தென்னவன் முன்னிலை வகித்தார்.

ஆசிரியை விஜயலட்சுமி வரவேற்றார்‌ . அப்துல் கலாம், படத்திற்கு மாலை அணிவித்து, வட்டார கல்வி அலுவலர் சிறப்புரை யாற்றினார்.விழாவில், கலாம் பற்றிய பேச்சு, கட்டுரை, ஓவியம், பொன்மொழிகள், கவிதை முதலிய போட்டிகள் நடைபெற்றன.

அய்பா சங்க நிர்வாகிகள் மற்றும் டாக்டர் மயூரி அவர்கள் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்கள். தமிழக அரசின் பசுமைச் சாம்பியன் விருது பெற்ற சமூக ஆர்வலர் அசோக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.அசோக் குமார், மரங்களின் பெயர்களால் வரைந்த அப்துல் கலாம் உருவ படத்தினை வட்டார கல்வி அலுவலர் அவர்கள் வெளியிட, ஆசிரியர் ராஜ வடிவேல் பெற்றுக் கொண்டார்.

மாணவர் சேர்க்கையில், முனைப்பாக செயல்பட்ட ஆசிரியை அம்பிகா, கலை நிகழ்வுகளில் சிறப்பாக செயல்பட்ட ஆசிரியை மனோன்மணி ஆகியோரை, வட்டார கல்வி அலுவலர்கள் அவர்கள் பாராட்டி பொன்னாடை அணிவித்து பரிசுகள் வழங்கினார். ஆசிரியை அருவகம் தொகுத்து வழங்கினார். ஆசிரியை சித்ரா நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை, தமிழ்ச்செல்வி, அகிலா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். விழாவில், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News