ஆவின் மிக மோசமான நிலைக்கு செல்கிறது: பாஜக தலைவர் அண்ணாமலை குற்றசாட்டு

தவறுகள் செய்கின்ற யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது வருமான வரி துறையின் கடமையாகும்.;

Update: 2023-11-25 09:00 GMT

மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக தலைவர் அண்ணாமலை

தமிழகத்தில் ஆவின் நிறுவனம் அதல பாதாளத்திற்கு சென்று கொண்டிருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். .

மதுரையில் நடைபெற்ற செய்தியாளர்கள்   சந்திப்பில் மேலும்  அவர் கூறியதாவது: காமராஜர் மீது பொய் புகார்களை கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் தான் திமுகவினர். திராவிட முன்னேற்றக் ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. எங்கு பார்த்தாலும் லஞ்சம் மக்கள் பிரச்னையை தீர்க்க இந்த ஆட்சியாளர்கள் ஆர்வம் காட்டவில்லை என்பன போன்ற நிகழ்வுகளைக் கூறமுடியும்.  தவறுகள் செய்கின்ற யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது வருமான வரி துறையின் கடமையாகும். கடந்த இரண்டு ஆண்டுகளாக பாஜக மற்றும் மத்திய அரசின் மீது  திமுக அமைச்சர்கள் சொல்கின்ற குற்றச்சாட்டுகளுக்கு அவ்வப்போது நாங்கள் பதில் அளித்து வருகிறோம்.

திமுகவில் பல கோழைகள் அமைச்சராக உள்ளனர்.அதற்கு உதாரணம் அமைச்சர் மனோ தங்கராஜ். பாரத பிரதமரை பற்றி தவறாக டுவீட் செய்து, எதிர்ப்புகள் வந்ததும், அதை டெலிட் செய்தவர் தான் அமைச்சர் மனோ தங்கராஜ் என்றார் பாஜக தலைவர்  அண்ணாமலை.

Tags:    

Similar News