கேரள லாட்டரி விற்பனை செய்து ரூ 5ஆயிரம் மோசடி செய்த நபர் கைது

மதுரையில் நடைபெற்ற பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடைய 5 பேரை போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர்;

Update: 2023-03-11 13:30 GMT

பைல் படம்

கோச்சடையில் 23 கிலோ கஞ்சா பறிமுதல்: ஆட்டோவுடன் நான்கு பேர் கைது

மதுரை  எஸ் எஸ் காலனி உதவிஆய்வாளர் பேரரசி. இவர் கோச்சடை டிபிஎம் ராதா நகர், அங்காள ஈஸ்வரி நகரில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார் .அப்போது சந்தேக படும்படியாக ஒரு ஆட்டோவில் ஆறு பேர் பயணம் செய்தனர் .சந்தேகம் அடைந்த போலீசார் ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனை செய்த போது இரண்டு பேர் தப்பி ஓடிவிட்டனர். இதனால் மேலும் சந்தேகமடைந்து நான்கு பேரை சுற்றி வளைத்து பிடித்து, மீண்டும் ஆட்டோவில் சோதனை செய்தனர். ஆட்டோவில் 22 கிலோ 800 கிராம் கஞ்சா இருந்தது.

அவற்றை பறிமுதல் செய்து ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். ஆட்டோவில் கஞ்சா கடத்திய ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்து நான்கு பேரை கைது செய்தனர் .ஒத்தக்கடை ராஜாக்கூர் மாரிமுத்து மகன் அருண்பாண்டி என்ற ஜெட் லீ 27 ,அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரபாபு மகன் சுப்ரமணி என்ற குட்டிமணி 23, பெருமாள் மகன் முத்துக்குமார் 27, வண்டியூர் தென்றல் நகர் கோவிந்தன் மகன் மணிகண்டன் 31 ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர். தப்பி ஓடிய காளீஸ்வரர் என்ற காளி, ராமகிருஷ்ணனை தேடி வருகின்றனர்.

தவிட்டுச்சந்தையில் பைக்கில் அமர்ந்து சென்ற பெண் தவறி விழுந்து பலி 

மதுரை தவிட்டுச் சந்தை பந்தடி எட்டாவது தெருவை சேர்ந்தவர் அழகர் மகன் அக்னி வீரபத்திரன். இவருடைய மாமியார் பேச்சியம்மாள்( 52.) இவர்கள் சம்பவத்தன்று பைக்கில் சென்றனர். மருமகன் வண்டியை ஓட்டி செல்ல மாமியார் பேச்சியம்மாள் பின்னால் அமர்ந்திருந்தார். வண்டியை தவிட்டுச்சந்தை கீழவெளி வீதி அருகே சென்றபோது வண்டியில் இருந்து தடுமாறிய மாமியார் பேச்சியம்மாள் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலமாக அடிபட்டு மயங்கினார் .அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பேச்சியம்மாள் பரிதாமாக உயிர் இழந்தார். இந்த விபத்து குறித்து மகன் முத்துமணி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து பேச்சியம்மாள் மரணத்துக்கான  காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வைகை வடகரையில் கேரள லாட்டரி விற்பனை செய்து ரூ 5ஆயிரம் மோசடி செய்த முதியவர் கைது

மதுரை செல்லூர் குமரன் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் கதிரவன் 45. இவரிடம் வைகை வடகரை தத்தனேரி பகுதியில் காலாவதியான கேரளா லாட்டரி சீட்டடை முதியவர் ஒருவர் விற்பனை செய்து செய்தார். அவரிடமிருந்து ரூ 5ஆயிரத்தை பெற்று மோசடி செய்துள்ளார். இந்த மோசடி குறித்து கதிரவன் செல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவுசெய்து அவரிடம் காலாவதியான லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து மோசடி செய்து ஏமாற்றிய முனிச்சாலை லட்சுமிபுரத்தைச் சேர்ந்த குருசாமி( 66 ) என்ற முதியவரை கைது செய்தனர்.


Tags:    

Similar News