நல்ல மாணவர் சமுதாயத்தை ஆசிரியர்களால் தான் உருவாக்க முடியும் : நீதிபதி பேச்சு

மதுரையில் நடந்த இலக்கிய மன்ற விழாவில் பேசிய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஸ்ரீமதி இவ்வாறு குறிப்பிட்டார்;

Update: 2023-10-18 11:15 GMT

மதுரை அருகே பறவை மங்கையர்கரசி கல்வி குழும வளாகத்தில் நடைபெற்ற இலக்கிய மன்ற விழாவில்  விருது வழங்கிய உயர்நீதிமன்ன நீதிபதி  ஸ்ரீமதி.

நல்லொழுக்க மிக்க மாணவர் சமுதாயத்தை ஆசிரியர்களால் தான் உருவாக்க முடியும் என்றார் சென்னை  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஸ்ரீமதி. 

மதுரை அருகே பரவை பகுதியில் உள்ள மங்கையர்க்கரசி கல்வி குழும வளாகத்தில்,மதுரை இலக்கிய மன்றம், ஸ்ரீ அருணாச்சலா அறக்கட்டளை, மங்கையர்க்கரசி கல்வி குழுமம் இணைந்து நடத்திய "நன்னெறி ஆசிரியர் விருது-2023 வழங்கும் விழாவில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி  எஸ். ஸ்ரீமதி, முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் , கல்லூரி பேராசிரியர்களில் சிறந்து விளங்கிய 38 பேருக்கு "நன்னெறி ஆசிரியர் விருது" வழங்கி கௌரவித்தார்.

விருது வழங்கி நீதிபதி ஸ்ரீமதி பேசியதாவது: ஆசிரியர் பணியில் இன்னும் யோகா, உடற்கல்வி போன்ற கல்விக்கு ஆசிரியர்கள் முக்கியத்துவம்தர வேண்டும் என்றும், நல்லொழுக்க மிக்க மாணவர் சமுதாயத்தை ஆசிரியர்களால் தான் உருவாக்க முடியும் எனறும் பேசினார்.

இவ்விழாவில், மதுரை இலக்கிய மன்ற நிறுவனர் ச. அவனி மாடசாமி வரவேற்புரையாற்றினார்.இலக்கிய மன்றத்திறன் புரவலர்கள் சொர்ணா வேல்சங்கர், சுமதி ஆச்சி ஆகியோர்குத்துவிளக்கு ஏறினார்கள்.ஸ்ரீஅருணாச்சலகல்வி அறக்கட்ட ளையின் தலைவர் எஸ்.அருணாச்சலம் தலைமை வகித்தார். மங்கையர்க்கரசி கல்லூரி செயலாளர் முனைவர் பி.அசோக்குமார், தமிழ்த்தேச சான்றோர் அறக்கட்டளை சேர்மன் எ.கே.ராஜதுரைவேல்பாண்டியன் மற்றும் மதுரை இலக்கிய மன்ற தலைவர் உயர்நீதிமன்றவழக்கறிஞர். கே.கே.கண்ணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இவ்விழாவில், அரசுப்பள்ளிக்கு உதவிவரும் "கல்விவள்ளல்" த.பா.ராஜேந்தின், இந்த ஆண்டின் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் ஆகியோருக்கு பாராட்டுப் பட்டயம் வழங்கப்பட்டது. இவ்விழாவில், மதுரை இலக்கிய மன்ற புரவலர் சூரஜ் சுந்தர சங்கர் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள், பல்வேறு மாவட்டங்களைச்சேர்ந்த ஆசிரியர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News