மதுரை செல்லூரில் காலண்டர் தயாரிக்கும் நிறுவனத்தில் திடீர் தீ விபத்து
மதுரை செல்லூரில் காலண்டர் தயாரிக்கும் நிறுவனத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.;
மதுரையில் பேப்பர் காலண்டர் தயாரிப்பு நிறுவனத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
மதுரை செல்லூர் 50 அடி சாலையில் பேப்பர் காலண்டர் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் உள்ளே நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, அக்கம் பக்கத்தினர் தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் தொடர்ந்து தீ எரிந்து கொண்டே இருந்தது.
இந்த தீ விபத்து குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் பேப்பர் காலண்டர் தயாரிப்பு நிறுவனத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீ மேலும் பரவாமல் தடுத்தனர். தீ பிடித்த இடத்தில் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்த தீயணைப்பு துறையினரை பொதுமக்கள் பாராட்டினர்.முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என, கூறப்படுகிறது. மேலும், வேறு ஏதேனும் காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.