மதுரை அருகே மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவர் மீது வழக்கு
பைபாஸ்ரோடு பாலத்துக்கடியில் கஞ்சா விற்ற பெண் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்;
கணவரின் ஆண்மைக் குறைவு தொடர்பான பிரச்னையில் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
மதுரை, திருப்பாலை அய்யப்பன்நகர், புதுநத்தம் ரோடு, தாமரை தெருவை சேர்ந்த தருண்குமார் மனைவி பவித்திரா(25.). இவர் தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: தனக்கும், தனராஜ் மகன் தருண்குமார்( 33.) இவர் பாலமேடு அரசு கால்நடை துறை ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இருவருக்கும் கடந்த பிப்ரவரி ஆறாம் தேதி திருமணம் நடந்தது. திருமணத்தின் போது எனது பெற்றோர் 50 பவுன் நகையும் 5 லட்சம் மதிப்புள்ள இரட்டை சீர்வரிசையும் கொடுத்து ரூ .10 லட்சம் செலவழித்து எனது பெற்றோர் நடத்தி வைத்தனர்.
இந்த நிலையில் திருமணத்திற்கு பின்பு எனது கணவர் ஆண்மையற்றவர் என்பது தெரிய வந்தது .அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்தபோது வெளியே இந்த விஷயம் தெரிந்தால் அசிங்கம் என்று என்னை துன்புறுத்த ஆரம்பித்தனர். கணவர் தருண்குமார் அவருடைய அம்மா தனலட்சுமி கணவரின் மூத்த சகோதரர் அருண்குமார் அவருடைய மனைவி திவ்யா கணவரின் மாமா சரவணன் இவர்கள் அனைவரும் சேர்ந்து துன்புறுத்த தொடங்கினர்.
நான் தெப்பக்குளம் தியாகராஜர் கல்லூரியில் எம்எஸ்சி, பிஎட் படித்து வருகிறேன். இந்த சம்பவத்திற்கு பிறகு அவர்கள் என்னை கல்லூரிக்கு செல்ல கூடாது என்றும் அறைக்குள் பூட்டி வைத்து சித்ரவதை செய்தனர். நான் தனியாக இருந்தபோது கணவரின் சகோதரர் அருண்குமார் தவறான முறையில் என்னிடம் நடந்து கொள்ள முயற்சி செய்தார். இதனால் நான் எனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டேன் .
பின்னர் கணவர் வீட்டார் இரண்டு முறை சமாதானம் பேசி அழைத்துச் சென்றனர் .அதன் பிறகு மீண்டும் கூடுதலாக கூடுதலாக வரதட்சனை கேட்டும் என்னை தொந்தரவு செய்ய ஆரம்பித்தனர்.கணவரின் அண்ணன் என்னை மீண்டும் மீண்டும் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ய மிரட்டி வந்தார்.அதற்கு என் கணவரும் உடந்தையாக இருந்து வந்தார். இதற்கு சம்மதிக்கவில்லை என்றால் கணவரும் மற்றும் குடும்பத்தாரும் என்னை தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறி விடவோம் என்று மிரட்டினர்.
இதனால் எனது உயிருக்கு பயந்து நான் எனது பெற்றோரின் வீட்டிற்கு சென்று விட்டேன் . நான் அங்கு இருந்தாலும் என் உயிருக்கு ஆபத்து உள்ளது.எனவே எனது கணவர்மற்றும் அவர் வீட்டாரிடமிருந்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அந்தப்புகாரில் குறிப்பிட்டிருந்தார். போலீசார் அவர் புகாரின்மீது விசாரணை நடத்தி பின்னர், கணவர் தருண்குமார், கணவரின் தாய் தனலட்சுமி, கணவரின் அண்ணன் அருண்குமார், அண்ணனின் மனைவி திவ்யா மற்றும் மாமா சரவணன் ஆகியவர் மீது வழக்கு பதிவு செய்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
பைபாஸ்ரோடு பாலத்துக்கடியில் கஞ்சா விற்ற பெண் உட்பட இரண்டு பேர் கைது
மதுரை, எஸ்.எஸ்.காலனி போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.அவர்கள் பைபாஸ் ரோடு என்.எம்.ஆர்.பாலம் அடியில் சென்றபோது அங்கு கஞ்சா விற்பனை செய்த பெண் உட்பட இரண்டு பேரை பிடித்தனர்.பின்னர் அவர்களை சோதனை செய்தபோது அவர்களிடம் இரண்டு கிலோ நூறு கிராம் கஞ்சா இருந்தது.அவற்றை பறிமுதல் செய்தனர்.பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.விசாரணையில் அவர்கள் கரிமேடு அந்தோனியார் கோவில்தெரு அழகம்மாள்(46,) தத்தனேரி களத்துப்பொட்டல் முத்துமகன் உதயகுமார்(36)ன்று தெரிய வந்தது.அவர்களை போலீசார் கைது செய்தனர்.