மதுரை அருகே கட்டுமான தொழில் நிறுவனங்களில் 48 மணி நேர வருமான வரித்துறை சோதனை
3வது நாளாக தொடரும் வருமானவரித்துறை சோதனையால், ஜெயபாரத் சிட்டி அலுவலகம் அவனியாபுரம் பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.;
மதுரை ஜெயபாரத் மற்றும் கிளாட்வே சிட்டி புரோமோட்டர் வீடு, அலுவலகங்களில் வருமானவரித்துறையினர் 48மணிநேரம் தொடர் சோதனை
மதுரையில் பிரபல கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டு வரும் ஜெயபாரத் நிறுவனத்தின் ஜெயபாரத் மற்றும் கிளாட்வே கிரீன் சிட்டி, அன்னை பாரத் சிட்டி,கிளாட்வே சிட்டி போன்ற நிறுவனங்களின் வீடுகள், அலுவலகங்களில் வருமானவரித் துறையினர் இரண்டாவது நாளாக 48 மணிநேரம் தொடர் சோதனைகளில் ஈடுபட்டனர்.கட்டுமான நிறுவன பங்குதாரர்களின் வீட்டில் நேற்று மாலை நேரப்படி முருகன் என்பவரது வீட்டில் 75 கோடி பணம் ரொக்கமாகவும்,மேலும் கட்டுகட்டாய் பணம், 3 கிலோ வரை தங்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
நேற்று இரவு அரசு தங்க நகை மதிப்பீட்டார் குழுவைக் கொண்டு தங்கத்தின் மதிப்பு கண்டறியும் பணிகள் நடைபெற்றது. அதில் மூன்று கிலோ 200 கிராம் தங்கம் கண்டறியபட்டுலதாக தகவல் கசிந்துள்ளது.மேலும், 48மணி நேர தொடர் வருமான வரித்துறை சோதனையில் இன்று மாலை நிலவரப்படி 75 கோடி பணம் கண்டறியப்டுள்ளதாகவும். மேலும், சோதனையில் சிக்கிய பணம் எண்ணும் பணி நடைபெற்றுகிறதாக தகவல் வெளியாகி உள்ளது.
மதுரை மண்டல வருமான வரித்துறை புலானாய்வு ஆணையர் செந்தில்வேல் தலைமையில் டெல்லி, ஹைதராபாத், சென்னை, கோவை, போன்ற ஊர்களில் இருந்து 35 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போதுள்ள, நிலையில் இதுவரை கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் முறைபடுத்தபட்ட நிலையில் 3வது நாளாக தொடரும் வருமானவரித்துறை சோதனையால், ஜெயபாரத் சிட்டி அலுவலகம் அவனியாபுரம் பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.