மதுரையில் அழகிரி ஆதரவு வேட்பாளர் வெற்றி பெற்றது எப்படி?

மதுரையில் அழகரி ஆதரவு சுயேட்சை வேட்பாளர் எவ்வாறு வெற்றி பெற்றார் என்ற கேள்வி எழுந்துள்ளது.;

Update: 2022-02-22 13:32 GMT

திமுகவின் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் ஆதரவாளர் முபாரக் மந்திரியின் மனைவி பானு. மதுரை மாநகராட்சி 47வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் தோல்வி அடைந்தார். மதுரை மாநகராட்சி 47வது வார்டில் திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து மு.க.அழகிரியின் ஆதவாளர் முபாரக் மந்திரி, தனது மனைவி பானுவை களமிறக்கினார். தேர்தல் வேலையில் திமுக நிர்வாகிகள் சிலரையும் இணைத்துக்கொண்டு அவர் பணியாற்றுவதாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், இன்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் பானு முபாரக் மந்திரி 4,561 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். 2,291 வாக்குகளை பெற்று பாஜக 2ம் இடத்தை பிடித்தது. திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் 3ம் இடத்துக்கு தள்ளப்பட்டார். மு.க. அழகிரி ஆதரவாளரின் இந்த வெற்றி, மதுரை திமுகவினரை திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. திமுகவுக்கு வார்டு ஒதுக்கப்படாததால், அதிருப்தியில் இருந்த திமுகவினரின் ஓட்டுகளைத்தான் பானு வாங்கியிருக்கிறார் என்று திமுகவினர் சிலர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News