மருந்துக்காக காத்திருக்கும் பொதுமக்கள்...

ரெம்டெசிவிர் மருந்துக்காக...;

Update: 2021-05-10 09:15 GMT

|மதுரை: ரெம்டெசிவிர் மருந்துக்காக பரிதவிப்புடன் காத்திருக்கும் பொதுமக்கள்

கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தங்களது உறவினர்களை காப்பாற்ற ரெம்டெசிவிர் மருந்தை பெறுவதற்காக மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பரிதவிப்புடன் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் காத்திருக்கும் அவலம்.

மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை கடந்த 2 நாட்களுக்கு முன்பாக தொடங்கி வைக்கப்பட்டது. நாளொன்றுக்கு ஐநூறு மருந்துகள் மட்டுமே பொது விற்பனைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று இருப்பு இல்லை எனக்கூறி விற்பனை கைவிடப்பட்டது.

இந்நிலையில் இன்று மீண்டும் துவங்கிய நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் உறவினர்களை காப்பாற்ற அதிகாலையிலிருந்தே வரிசையில் குவியத் தொடங்கினர்.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சுப்புராம் என்பவர் கூறுகையில், என்னுடைய மகன் ஆனந்த் (35). தேனி அரசு மருத்துவ மனையில் கரோனா சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அவரது நிலைமை மிக மோசமாக உள்ளது. ஆகையால் அவருக்கு ரெம்டெசிவிர் கொடுத்தால் ஒரு அளவுக்கு சரியாகும் என மருத்துவர்கள் கூறினர். நேற்றிலிருந்து அந்த மருந்தை பெறுவதற்காக இங்கு காத்திருக்கிரேன். ரெம்டெசிவிர் மருந்து கிடைத்தால் மட்டுமே என் மகனை காப்பாற்ற முடியும் என்கிறார்.

திருப்பூரைச் சேர்ந்த அருண் குமார் என்பவர் கூறுகையில், எனது உறவினருக்காக இந்த மருந்தை வாங்குவதற்காக வந்துள்ளேன். இருப்பு இல்லை என்கிற காரணத்தால் நேற்று மருந்து வழங்க வில்லை ஆகையால் என்று காத்திருந்து அதனை வாங்கிச் செல்ல வரிசையில் நிற்கிறேன் என்கிறார்.

#இன்று #கொரோனா #ஊரடங்கு #corona #Instanews #இன்ஸ்டாநியூஸ் #lockdown #theni #ரெம்டெசிவிர் #தேனி #tamilnadu #hospital #medicien

Tags:    

Similar News