கொரோனா தொற்றைத் தடுப்பதில் தடுமாற்றம்? -முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேட்டி

Update: 2021-05-22 17:28 GMT

மதுரை மாவட்ட உள்ளிட்ட தமிழகம் முழுவதும் காட்டுத் தீயாக பரவிவரும் கொரோனா தொற்றைத் தடுப்பதில் புதிய அரசு தடுமாறுகிறதோ என்று மக்களுக்கு அச்சம் கவலை வேதனை ஏற்பட்டுள்ளது என்று முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் செய்தியாளரிடம் கூறினார்

இன்றைக்கு மதுரை மாவட்டம் உட்பட தமிழகத்தில் தினசரி பாதிப்பு அதிகரித்து உள்ளது நாட்டின் நோய் பரவல் அதிகம் உள்ள மாநிலமாக தமிழகம் முதலிடத்தில் உள்ளது தமிழகத்தில் குணமடைவோர் எண்ணிக்கையை விட நோயினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது மருத்துவமனை எல்லாம் நிரம்பி படுக்கைகள்,ஆக்சிஜன், மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி தலைமையான அம்மாவின் அரசு கடந்த ஆண்டில் இருந்தபோது முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது சாலையில் மக்கள் நடமாட்டமே இல்லை முழு கட்டுப்பாட்டுக்குள் இருந்தது.

சுகாதாரத்துறை சார்பில் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு தொற்று உறுதியானவை அழைத்துச் சென்றனர் அவர்களுக்கு தனி அறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது தொற்று பாதிக்கப்பட்டவர்களை யாரும் பார்க்க அனுமதி கிடையாது அதனைத் தொடர்ந்து நோய் குறைந்ததும் கொரோனா மையத்திற்கு அனுப்பப்பட்ட பின் அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் தடுப்பு ஏற்படுத்தப்பட்டு அங்கு 14 நாட்கள் யாரும் உள்ளே செல்வோ, இருப்பவர்கள் வெளியே செல்லவோ அனுமதி இல்லை என ஏற்படுத்தப்பட்டது

அதேபோல் சுகாதாரம்,வருவாய், உள்ளாட்சி ,காவல்துறை ஆகிய துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களை தொடர்புகண்டு

அவர்களுடன் தொடர்பு இருந்த நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர் இதனால் நோய் பரவல் பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டது

ஊரடங்கு காலத்தில் பொது விநியோகத் திட்டம் மூலம் மக்கள் அத்தியாவசிய தேவையான உணவு பொருட்கள் ,அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை தொடர்ந்து வழங்கப்பட்டு அதோடு மட்டுமின்றி காய்கறிகள், பலசரக்கு பொருட்கள் உள்ளிட்ட சாமான்கள் வீட்டுக்கு கிடைக்கும் வகையில் உரிய ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் சார்பில் துரிதமாக ஏற்படுத்தபட்டது இதனால் மக்கள் வெளியும் வரும் தேவைகளை குறைந்தது

கடந்த ஆண்டில் தடுப்பூசி இல்லாத காலத்தில் முதல் அலையில் போது உரிய விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்படுத்தி மக்களின் முழுமையான ஒத்துழைப்பை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அம்மாவின் அரசு பெற்றதன் மூலம்

நோய் தடுப்பு பணியில் அம்மாவின் அரசு வெற்றி பெற முடிந்தது

ஆனால் தற்போது புதிய அரசு இந்த நடைமுறை எதுவும் பின்பற்றவில்லை நோய் அறிகுறி இருந்தால் உடனே மருத்துவமனைக்கு செல்லுங்கள் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது ஆனால் மருத்துவமனைக்கு செல்வோர்கள் 3 மணி நேரம் முதல் 6 மணி நேரம் வரை காத்திருந்து ரத்த பரிசோதனை உள்ளிட்ட பல பரிசோதனை மேற்கொண்டாலும்

பெரும்பாலானவர்களை போதிய படுக்கை வசதி இல்லாமல் வீட்டுக்கு அனுப்புகின்றனர்

இதனால் வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களுக்கும் நோய் தொற்று பரவ வாய்ப்பு உள்ளது நோய்தொற்று ஏற்பட்டவர்களை அழைக்க எங்கேயும் சுகாதாரத்துறை வருவது இல்லை என்ற குற்றச்சாட்டு எங்கும் உள்ளது நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் புதிய கட்டுப்பாடு இல்லாத காரணத்தால் தடுப்பை ஓரங்கட்டி சகஜமாக மக்கள் வெளியே செல்கின்றனர்

நோய் பாதிப்பு உள்ள பகுதிகளில் வசிப்போர் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளாமல் சர்வ சாதாரணமாக வெளியே வருவதால் நோய் பரவல் அதிகரிக்க காரணமாக உள்ளது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி தலைமையிலான அம்மாவின் அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான மக்களுக்கு கபசுர குடிநீர் ,ஆர்சனிக் ஆல்பம், ஹோமியோபதி மருந்து வழங்கப்பட்டது தெருக்கள் தோறும் கிராமந்தோறும் கிருமிநாசினி தொளிக்கப்பட்டது தற்போது எதுவும் பின்பற்றவில்லை

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அம்மாவின் அரசு முழு உண்மையானஊரடங்கை மக்கள் ஒத்துழைப்போடு கடைபிடிக்கப்பட்டது தற்போது ஊரடங்கு அறிவிப்பு அளவில் உள்ளது இது நோய் பரவலுக்கு அதிகரிக்க முக்கிய காரணமாக உள்ளது

முதல் அலையில் போது பின்பற்றப்பட நடைமுறை எதுவும் பின்பற்ற படவில்லை என மக்கள் மனங்களில் ஆயிரம் ஆயிரம் கேள்விகள் எழுகிறது நோய்களை கட்டுப்படுத்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி தலைமையிலான அம்மாஅரசு கடைப்பிடித்தை மக்கள் ஒத்துழைப்பு செயல்படுத்திய நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் அதன் மூலமாக மக்களின் விலைமதிக்க முடியாத உயிர் காக்க வேண்டும் என்று அரசுக்கு வேண்டுகோள் வைக்கின்றேன்

வெற்றிகரமான நடைமுறைகளை செயலபடுத்துவதில் புதிய அரசு தயங்கும் காரணமாக நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதில் புதிய அரசு தடுமாறுகிறதோ என்ற அச்சம் கவலை வேதனை மதுரை மாவட்ட மக்களுக்கு ஏற்பட்டுள்ளது இதை போர்க்கால அடிப்படையில் கவனத்தில் கொண்டு செயல்படுத்தவில்லை என்றால் தொற்று அதிகரிக்கும் அதன் மூலம் உயிரிழப்பு அதிகரிக்கும் என்று அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்

தென்மேற்கு பருவமழை அந்தமான் கடல் பகுதியில் ஆரம்பித்து வங்கக்கடலில் புயல் உருவாகி உள்ளது இந்த புயலால் தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை கூறியுளளது தென்மேற்கு பருவமழைதுவங்கிய காரணமாக மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது

தாழ்வு பகுதி புயலாக வலுவடைந்து வடமேற்கு திசையில் ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் நோக்கி 26 ஆம் தேதி கரையை கடக்க வாய்ப்பு உள்ளது இதன் காரணமாக தமிழ்நாடு ஆந்திரா மன்னர் வளைகுடா பகுதியில் மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 75கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் விசும்

மே 24 25 26 ஆகிய நாட்களில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் வங்க கடலில் உருவாகும் புயலால் பாதிப்படையும் மாவட்டங்களில் மாவட்ட நிர்வாகம் புயல் காற்று வீசும் பகுதிகளில் தாழ்வான இடங்களில் இருக்கும் மக்களை பாதுகாப்பு இடங்களுக்கு அழைத்து சென்ற வேண்டும்.

சூறைக்காற்று வீசும் பகுதிகளில் உரிய முன்னெச்சரிக்கை எடுக்க வேண்டும் அதேபோல் அந்த பகுதியில் விளம்பர பலகைகளை அகற்றப்படவேண்டும் நீர்நிலைகளை முழுமையாக கண்காணிக்கவண்டும் முகாம்களில் உள்ள மக்களுக்கு குடிநீர் பால் பவுடர் மருத்துவ வசதிகளை செய்து தரவேண்டும் புயல் கரையை கடக்கும் பொழுது ஒரு உயிரிழப்பு கூட ஏற்படாமல் மக்களை காக்க வேண்டும் இந்த கோவியட் காலத்தில் கூடுதலாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன் என்று கூறினார்

Tags:    

Similar News