மதுரை அருகே சோழவந்தான் சிஎஸ்ஐ பள்ளியில் யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக யோகா தினத்தை முன்னிட்டு மதுரை அருகே சோழவந்தான் சிஎஸ்ஐ பள்ளியில் யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-06-23 08:59 GMT

சோழவந்தான் சிஎஸ்ஐ பள்ளியில் ,யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

யோகாவை உலகத்திற்கே அறிமுகப்படுத்திய நாடு இந்தியா. இதனை உலகிற்கு உணர்த்தும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி எடுத்த முயற்சிகளின் பலனாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 23ந்தேதி உலக யோகாக தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஐநா சபையும் இதனை அங்கீகரித்து உள்ளது.

அந்த வகையில் உலக யோகா தினத்தையொட்டி மதுரை மாவட்டம் சோழவந்தான், சி. எஸ். ஐ. தொடக்கப்பள்ளியில் யோகா பயிற்சிக்கான விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு, பள்ளித்தலைமை ஆசிரியர் ராபின்சன் செல்வக்குமார் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக ஆலோசகர் வர்த்தகர்கள் சங்க செயலாளர் ஆதி பெருமாள் முன்னிலை வகித்தார்.

உதவி ஆசிரியை வனிதாசாந்த குமாரி வரவேற்றார். எல்.ஐ.சி. சீனியர் பிராஞ்ச் மேனேஜர் கண்ணன், வளர்ச்சி அதிகாரி முத்துராமன் ஆகியோர் யோகா குறித்து மற்றும் யோகா பயிற்சிகளின் அவசியம் மற்றும் உடல் மனம் நலம் சார்ந்த காரியங்களை மாணவ மாணவிகளுக்கு மிகவும் தெளிவாக எடுத்துரைத்தனர்.

பள்ளி, மாணவ மாணவிகள் யோகா முத்திரைகளை செய்து காட்டினார்கள். அனைத்து மாணவ மாணவிகளுக்கும், பிஸ்கட் மற்றும் குளுக்கோஸ் பானம் வழங்கப்பட்டது. உதவி ஆசிரியை பிரேமாஅன்னபுஷ்பம் நன்றி கூறினார்.

Tags:    

Similar News