சோழவந்தான் அரசு போக்குவரத்துக் கழக டெப்போ முன்பு தொழிலாளர்கள் போராட்டம்
சோழவந்தான் பேருந்து பணிமனை முன்பு அதிகாரிகளை கண்டித்து,நடத்துனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்;
பேருந்து நடத்துனர்களின் கேஸ் பேக்கை சோதனை செய்வதாக, அதிகாரிகள் மீது குற்றம் சாட்டி. போராட்டத்தில் ல் ஈடுபட்டு முழக்கங்களை எழுப்பினர்.
மதுரை மாவட்டம், சோழவந்தான் அரசு பேருந்து பணிமனையில் சுமார் 40க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகிறது. மதுரை ,திருமங்கலம், வாடிப்பட்டி, உசிலம்பட்டி போன்ற பகுதிகளுக்கு தினந் தோறும் பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், சுமார் 50க்கும் மேற்பட்ட நடத்துனர்கள் பணிபுரிந்து வருகின்றனர் .
இந்த நிலையில், நடத்துனர்களிடம் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தினசரி கேஸ் பேக்கை சோதனை செய்வதாகவும், இதனால், மிகுந்த மன உளைச்சலுக்கு தாங்கள் ஆளாகி வருவதாகவும் குறிப்பிட்ட நேரத்திற்கு பேருந்துகளை இயக்க முடியாததால் பொது மக்கள் மத்தியில் கெட்ட பெயர் ஏற்படுவதாகவும் கூறி, சோழவந்தான் அரசு பணிமனை முன்பு நடத்துனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், போக்குவரத்து கழக நிர்வாகிகள் மற்றும் உயர் அதிகாரிகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர் .
மேலும், இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சரும் நேரில் ஆய்வு செய்து எங்களுக்கு உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லை யென்றால் பேருந்துகளை நிறுத்தி வைக்கும் போராட்டத்தில் ஈடுபடுவது என்றும் ஆர்ப்பாட்டத்தின் போது தெரிவித்தனர். அரசு பேருந்து நடத்துனர்கள் ஒன்று சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால், பேருந்துகள் இயங்காமல் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டது.