சோழவந்தான் அருகே குழந்தைகள் நல மையம் திறப்பது எப்போது

தற்போது புதிதாக கட்டி முடிக்கப்பட்டு அங்கன்வாடி மையம் செயல்பட தயார் நிலையில் உள்ளது;

Update: 2023-09-22 16:45 GMT

சோழவந்தான் அருகே  குழந்தைகள் நல மையம் திறப்பது எப்போது?

சோழவந்தான் அருகே அங்கன்வாடி மையத்தை திறக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், தென்கரை ஊராட்சிக்குட்பட்ட ஊத்துக்குளி கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. பல ஆண்டுகளாக அங்கன்வாடி மையம் இல்லாத நிலையில், தற்போது புதிதாக கட்டப்பட்டு அங்கன்வாடி மையம் செயல்பட தயார் நிலையில் உள்ளது.

பல்வேறு காரணங்களால், அந்த அங்கன்வாடி மையம் பூட்டிய நிலையில் உள்ளது. இதனால், சமுதாயக் கூடத்தில் குழந்தைகளை வைத்து பராமரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு, உடனடியாக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் , மாவட்ட ஆட்சியர் நேரடி விசாரணை செய்து, புதிய கட்டிடத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் .இதனால், அதிகப்படியான குழந்தைகள் அங்கன்வாடி மையத்தில் சேரும் சூழ்நிலை உருவாகும் என இப்பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Tags:    

Similar News