திமுகவுக்கு வாக்களித்தால் தான் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படும்: அமைச்சர் மூர்த்தி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், தமிழகம் முழுவதும் திமுகவின் வெற்றி 100 சதவீதம் பிரகாசமாக உள்ளது என்றார் அமைச்சர்;

Update: 2022-02-16 08:15 GMT

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

உள்ளாட்சித்தேர்தலில் திமுகவுக்கு வாக்களித்தால்தான் நலத்திட்டங்களை எளிதாக நிறைவேற்ற முடியும் என்றார்  லணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது, அவர்  மேலும் பேசியதாவது:முதலமைச்சர் ஸ்டாலினின் எட்டு மாத கால ஆட்சியில் செய்த நலத்திட்டங்களால், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், தமிழகம் முழுவதும் திமுகவின் வெற்றி 100 சதவீதம் பிரகாசமாக உள்ளது. நகர்புற உள்ளாட்சி தேர்தலில், எதிர்கட்சியினர் மக்களுக்கு எதைக் கொடுத்தாலும் வாடிப்பட்டி பேரூராட்சியில் கண்டிப்பாக உதயசூரியன் உதிக்கும். பேரூராட்சியில் பினாமியாக வேலை செய்யும் துப்புரவுத் தொழிலாளர்கள் மற்றும் நிர்வாகத்தில் கொள்ளையடித்த நபர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த தேர்தல் முடிந்து நகராட்சிகளுக்கும் பேரூராட்சிகளுக்கும் நலத்திட்டங்கள் செய்யப்போவது யார்  என்றால் அவர் முதலமைச்சர் ஸ்டாலின்தான். மதுரை மாவட்டத்தில், நான் சொல்வது தான் நடக்கும். எங்களுக்கு வாக்களித்தால் தான் திட்டங்கள் வந்து சேரும் என்றார் அமைச்சர் மூர்த்தி.தேர்தல் பிரசாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு பெயரை உச்சரித்து அமைச்சர் மூர்த்தி பேசிவருவது குறிப்பிடத்தக்கது.மேலும், திமுகவை தவிர மற்ற கட்சிகளுக்கு வாக்களித்தால் நாங்கள் எதையும் செயல்படுத்தமாட்டோம் என்றும் மற்ற கட்சி வேட்பாளர்களை மறைமுகமாக அச்சுறுத்தும் தொனியில் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News