மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே பேனா வடிவ தேருக்கு வரவேற்பு

எழுத்தாளர் கலைஞர் முத்தமிழ் தேருக்கு வாடிப்பட்டி தாரை தப்பட்டை முழங்கவரவேற்பு கொடுக்கப்பட்டது.;

Update: 2023-11-09 17:15 GMT

வாடிப்பட்டி அருகே, பேனா வடிவ தேருக்கு, சிறப்பான வரவேற்பு  அளிக்கப்பட்டது

வாடிப்பட்டியில் பேனா வடிவமுத்தமிழ் தேருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே சாணாம்பட்டியில், மாவட்ட எல்லையில் தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பாக எழுத்தாளர் கலைஞர் முத்தமிழ் தேருக்கு வாடிப்பட்டி தாரை தப்பட்டை முழங்கவரவேற்பு கொடுக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், தாசில்தார் மூர்த்தி, காவல் ஆய்வாளர் முத்து, வருவாய் ஆய்வாளர் அசோக்குமார் கிராம நிர்வாக அலுவலர் செல்லப்பாண்டி பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயலட்சுமி, பேரூராட்சித் தலைவர் மு.பால் பாண்டியன், ஒன்றிய செயலாளர் பால ராஜேந்திரன், முன்னாள் பேரூராட்சி தலைவர் கிருஷ்ணவேணி, பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திக், பேரூராட்சி கவுன்சிலர்கள் ஜெயகாந்தன், கார்த்திகா ராணி மோகன், மீனா ஆறுமுகம்,சரசு ராமு உள்பட பேரூராட்சி பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.இந்த தேரில் உள்ள கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.அதில், வைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சி மற்றும் புத்தகங்களை பொதுமக்கள் பார்வையிட்டனர்.

Tags:    

Similar News