திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் வேகானந்தர் ஜெயந்தி விழா
மதுரை, திருவேடகம் விவேகானந்த கல்லூரி மற்றும் பள்ளியின் விவேகானந்த ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.;
சோழவந்தான் அருகே உள்ள திருவேடகம் விவேகானந்த கல்லூரி மற்றும் பள்ளியின் விவேகானந்த ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இறை வணக்கம் மற்றும் தமிழ் தாய் வாழ்த்துத்துடன் விழா இனிதே துவங்கப்பட்டது. கல்லூரி முதல்வர் முனைவர் வெங்கடேசன் வரவேற்புரை ஆற்றினார்.
பஜனைக் குழு மாணவர்கள் கல்லூரி வாழ்த்து பாடல் பாடினர். சிறப்பு விருந்தினராக பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் செல்வம் விவேகானந்தர் ஜெயந்தி தின உரை ஆற்றினார்.
தேசிய மாணவர் படை, தேசிய நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பாராட்டும் சான்றிதழும் பணமுடிப்பும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்தின் தலைவர் ஸ்ரீமத் சுவாமி சுத்தானந்தா, செயலர் ஸ்ரீமத் சுவாமி சத்யானந்த, பொருளாளர் ஸ்ரீமத் சுவாமி அபேதானந்தா, விவேகானந்த கல்லூரியின் செயலர் ஸ்ரீமத் சுவாமி வேதானந்தா, கல்லூரி குலபதி ஸ்ரீமத் சுவாமி அத்யாத்மனந்த, விவேகானந்த மேல்நிலைப் பள்ளியின் செயலர் ஸ்ரீமத் சுவாமி பரமானந்த, துணை முதல்வர் முனைவர் பார்த்தசாரதி, அகத்தர மையத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதீஷ்பாபு, முதன்மையர் முனைவர் சஞ்சீவி, உடற்பயிற்சி இயக்குனர் முனைவர் சீனிமுருகன், தேசிய மாணவர் படை ஒருங்கிணைப்பாளர் இராஜேந்திரன் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் மாதவன் முன்னிலை வகித்தனர்.
கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் பங்குபெற்ற கொடிகாத்த குமரன், விஷ்ணு பக்தன் அம்பரிஷன், ஏகலைவனின் குரு பக்தி, Significance of lmage Worship, தான வீரர் கர்ணன் ஆகிய நாடகங்களும், கரகாட்டம், தீபயோகா ஆகிய கலை நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற்றன.
கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் இராமகிருஷ்ணன் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். பேராசிரியர்கள், முன்னாள் பேராசிரியர்கள், அலுவலர்கள், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.