மதுரை அருகே திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் விநாயகர் சதுர்த்தி விழா
மதுரை அருகே திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.;
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. வடமாநிலங்களில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாக்களுக்கு நிகராக கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்திலும் இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் மதுரை அருகே திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெற்றது. கல்லூரி பிரார்த்தனை கூடத்தில் அகண்ட நாம ஜெபம் அதிகாலை 4 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்றது. கல்லூரியின் செயலாளர் சுவாமி வேதானந்த, கல்லூரியின் குலபதி சுவாமி அத்யாத்மானந்த, முதல்வர் வெங்கடேசன் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலை வகித்தனர்.
மாணவர்கள் தங்கி இருக்கும் அறையில் விநாயகர் வழிபாடு நிகழ்ச்சியினை பார்வையிட்டனர். விநாயகர் சதுர்த்தி விழாவின் சார்பாக மாணவர்கள் தங்கள் கலை படைப்புகளை சிறப்பாக செய்திருந்தனர். அகண்ட நாம ஜெபம் நிறைவு நிகழ்ச்சியில் குலபதி சுவாமி அத்யாத்மானந்த ஆசியுரை வழங்கினார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
மதுரை அருகே, தேனூரில் விநாயகர் சதுர்த்தியைமுன்னிட்டு, கற்பக விநாயகர் திருவுருவச் சிலை ஊர்வலம் நடைபெற்றது. தேனூர் சேம்பர் கிராமத்தில் உள்ள, கற்பக விநாயகருக்கு தேனூர் சேம்பர் பகுதி மக்கள் சார்பில், சிறப்பு அபிஷேக அர்ச்சனைகள் நடைபெற்றது .
அதைத் தொடர்ந்து, தேனூர் சேம்பர் பகுதிகளில் கற்பக விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. தெருக்கள் தோறும் ,விநாயகருக்கு கொழுக்கட்டை படைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர் .இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை சமயநல்லூர் காவல் நிலையத்தினர் செய்திருந்தனர் .இதற்கான ஏற்பாடுகளை, தேனூர் சேம்பர் விநாயகர் சதுர்த்தி விழா குழுவினர் செய்திருந்தனர்.