அமைச்சர் மூர்த்தி உடல் நலம் பெற வேண்டி கிராம மக்கள் கோவிலில் வழிபாடு
அமைச்சர் மூர்த்தி உடல் நலம் பெற வேண்டி மதுரை அருகே கிராம மக்கள் கோவிலில் வழிபாடு நடத்தினர்.;
தமிழக பத்திரபதிவு துறை அமைச்சர் பி.மூர்த்தி கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார். அவர் விரைவில் நலம்பெற வேண்டி மதுரை மாவட்டம், பாலமேட்டில் உள்ள மகாலிங்க சுவாமி கோவிலில், சிறப்பு பூஜையினை பாலமேடு கிராம பொது மக்கள்,மகாலிங்கசுவாமி மடத்துக் கமிட்டித் தலைவர் மலைச்சாமி, செயலாளர் பிரபு, பொருளாளர்ஜோதி தங்கமணி ஆகியோர் முன்னிலையில சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதில், பாலசுப்பிரமணியன், கிருஷ்ணமூர்த்தி, மனோகரவேல், பாண்டியன்,வேலு, ரவி உள்பட பலர் கலந்துகொண்டனர்.