மதுரை அருகே மின் தடையால் கிராம மக்கள் அவதி

மின்துறை அமைச்சரின் அறிக்கைக்கு முரணாக மின்தடை ஏற்படுவது வேதனை அளிப்பதாக கிராம மக்கள் வேதனை தெரிவித்தனர்;

Update: 2023-04-25 03:30 GMT

பைல் படம்

மேலக்கால் ஊராட்சியில் இரவு நேர மின்தடையால் பொதுமக்கள் அவதிப்பட நேரிட்டது.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மேலக்கால் கிராமத்தில் இரவு நேரங்களில் மின்தடை ஏற்படுவதால், பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில் ,மின்தடை காரணமாக குழந்தைகளை வைத்திருப்பவர்கள் ஆண்டு இறுதி தேர்வுக்கு தயாராகும் மாணவ மாணவிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர் . மின்துறை அமைச்சர் தமிழகத்தில் மின்தடை ஏற்பட வாய்ப்பு இல்லை என அடிக்கடி கூறிவரும் நிலையில், மதுரை மாவட்டத்தில் பல பகுதிகளில் இதுபோன்று அடிக்கடி மின்தடை ஏற்படுவதால், பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறுகையில்: அமைச்சரின் பேச்சுக்கு எதிர்மறையாக மின்தடை ஏற்படுவதாகவும், இது அதிகாரிகளால் திட்டமிட்டு நடைபெறுகிறதா என்ற சந்தேகம் இருப்பதாகவும் கேள்வி எழுப்புகின்றனர். மேலும் ,கடந்த சில தினங்களாக கோடை மழை பெய்து வரும் நிலையில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.துறை அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தி மின்தடை ஏற்படாத Sender நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News