சோழவந்தான் அருகே அரசு அதிகாரிகளை முற்றுகையிட்ட கிராம மக்கள்

கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு ஒப்பந்ததாரர் உரிய இழப்பீடு வழங்காததால் பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்

Update: 2023-11-03 09:15 GMT

சோழவந்தான் அருகே அரசு அதிகாரிகளை முற்றுகையிட்ட கிராம பொதுமக்கள்.

சோழவந்தான் அருகே இரும்பாடி மன்னாடிமங்கலம் இடையே வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்படும் பாலத்திற்கு நிலம் கையகப்படுத்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே இரும்பாடி மன்னாடி மங்கலத்தை இணைக்கும் வகையில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பாலம் கட்டும் பணி வைகை ஆற்றின் குறுக்கே நடைபெற்று வருகிறது .

இதனை செயல்படுத்தும் ஒப்பந்ததாரர் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்காததால், பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மன்னாடிமங்கலம் பகுதியில் நிலம் கையகப்படுத்தும் நோக்கில் அதனை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட வந்த அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், நெடுஞ்சாலைத்துறை, நில அளவை அதிகாரிகள் ஒப்பந்ததாரரின் பணியாளர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

இது குறித்து, பொதுமக்கள்கூறும் போது ,பாலம் கட்ட வேண்டியது எங்களின் நீண்ட நாள் கோரிக்கை ஆகும். அதற்கு நாங்கள் நிலம் வழங்க தயாராகவே உள்ளோம் .ஆனால், உரிய இழப்பீடு தொகையை சரியான முறையில் வழங்காததால் தான், நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். இது குறித்து, அரசு அதிகாரிகள் உரிய இழப்பீட்டினை வழங்கி பாலம் கட்டும் பணியை தொடங்குமாறு கோரிக்கை விடுக்கிறோம் என்றனர்.

இந்நிலையில், நெடுஞ்சாலை துறை அதிகாரி சொக்கர் என்பவர் மக்களை மிரட்டியதாகவும் . இது குறித்து, மாவட்ட நிர்வாகத்திற்கும் வாய் மொழியில் புகார் தரப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்த நிலையில், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வருவாய்த்துறை மற்றும் நில அளவை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும் தெரிகிறது. இது குறித்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரடியாக விசாரணை செய்து பொதுமக்களுக்கு நிலத்திற்கு உண்டான உரிய இழப்பீடு வழங்கி பாலப்பணியை தொடங்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags:    

Similar News