சோழவந்தான் அருகே விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி அன்னதானம்.
விஜயகாந்த் 2006 முதல் 2016 வரை சட்ட மன்ற உறுப்பினராகவும், 2011 முதல் 2016 வரை எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார்.;
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே மேலக்காலில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது
மதுரை மாவட்டம் ,சோழவந்தான் அருகே உள்ள மேலக்கால் கிராமத்தில் தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் பாலச்சந்திரன் கட்சி கொடி ஏற்றி வைத்தார் .
பின்பு, ஏழை எளிய மக்களுக்கு இலவச வேஷ்டி, சேலை மற்றும் மாணவ,Madurai News, Madurai News Today மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் எழுதுகோல்கள் வழங்கினர் .இதையொட்டி நடைபெற்ற அன்னதான நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தெற்கு ஒன்றியசான் செயலாளர் முத்துப்பாண்டி தலைமை வகித்தார் . மாவட்ட துணை செயலாளர் தங்கராஜ் தேய்வேந்திரன் நல் கர்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் மணவாளன் கிளை நிர்வாகிகள்பாலமுருகன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை, கே வீரகுமார் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர் இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.மதுரை அருகே பல இடங்களில், விஜயகாந்த் பிறந்த தினத்தையொட்டி, பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
கேப்டன் என்று அழைக்கப்படும் விஜயகாந்த் திரைப்பட நடிகரும், தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் கட்சியின் நிறுவனத்தலைவர், ஆவார். 2006 முதல் 2016 வரை தமிழ்நாடு சட்ட மன்ற உறுப்பினராகவும், 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார்.இவர் கடந்த 25.08.1952 -ல் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டைக்கு அருகில் உள்ள இராமானுசபுரம் என்னும் சிற்றூரில் பிறந்தவர். சிறுவயதிலேயே அவரது குடும்பம் மதுரைக்கு இடம் பெயர்ந்தது இவருக்கு தற்போது வயது 70 ஆகிறது.