சோழவந்தானில் நடிகர் விஜய் பயிலகம் திறப்பு..!
சோழவந்தானில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விஜய் பயிலகம் திறக்கப்பட்டது.
சோழவந்தானில் விஜய் பயிலகம் திறப்பு:
சோழவந்தான்:
தமிழக வெற்றி கழகம் சார்பில் சார்பில் சோழவந்தானில் விஜய் பயிலகம் திறப்பு மற்றும் உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் மாவட்டத் தலைவர் கல்லணை தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, பேரூர் தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பாலா, செயலாளர் பாண்டி, மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் பிரவீன் வரவேற்புரை ஆற்றினார்.
இந்த கூட்டத்தில், கலந்து கொண்டு மதுரை மாவட்ட தலைவர் கல்லணை செய்தியாளர்களிடம் கூறிய போது :
தமிழக வெற்றி கழகம் போராட்டம் எதிர்ப்புன்னு சார்ந்த பயணிக்கிற அரசியல் கட்சி கிடையாது மக்களின் தேவைகள் அறிந்து சேவைகள் செய்து வளர்ந்த கட்சி எல்லாருமே அரசியலுக்கு வந்ததுக்கு அப்புறம் சேவை செய்வதாக சொல்வார்கள் ஆனால்,
தளபதி அப்படி கிடையாது சேவை செஞ்சிட்டு தான் அரசியலுக்கு வந்தாரு. இன்று வரை மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் தொடர்ந்துகிட்டு தான் உள்ளது. இப்போது பொதுச் செயலாளர் மூலம் விலையில்லா வீடு வழங்கும் திட்டம் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, மதுரையில் அந்தத் திட்டத்தை வழங்குவதற்கு பூமி பூஜை போடப்பட்டிருக்கு. தமிழக வெற்றி கழக கொடியை கிராமங்கள்தோறும் வீடு தோரும் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதற்காக இன்று சோழவந்தான் தொகுதி சார்பாக ஆலோசனை கூட்டம் போட்டிருக்கிறோம். விஜய் படம் வந்தாலே நூறு பேருக்கு சாப்பாடு போட்டு விட்டு தான் படத்திற்கு போவோம் அதேபோல், ஆடியோ லான்ச் என்றாலே ஏதாவது பொதுமக்கள் குழந்தைகள் முதியோர்களுக்கு உதவி செய்வோம் .
தமிழக வெற்றிக்கழக கொடி அறிமுகம் என்பது இந்தியாவே எதிர்பார்த்தது தமிழகமே எதிர்பார்த்தது அதுவும் நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த திருநாள் அது வெற்றிகரமாக நடந்துள்ளது. மதுரையில் மாநாடு நடத்தனும் என்பது எங்களோட ஆசை.
அதே போல், ஒவ்வொருவரும் அவங்க அவங்க ஊர்ல மாநாடு நடத்தனும் அப்படின்னு கோரிக்கை வைத்தார்கள். மதுரையில் மாநாடு நடத்தினால் பெருமை அதை தளபதி தான் முடிவு செய்யனும். மாநாடு என்று சொல்லும் போதே மதுரையில் வையுங்கள் என்று சொல்லி இருக்கோம் ஏனென்றால், மதுரை என்பது மூன்றெழுத்து மந்திரம் என்பதற்காக சொன்னோம் ஆனால், தளபதி எங்கு மாநாடு வச்சாலும் பல கோடி பேர் நாங்கள் போய் நிற்கத்தான் போகிறோம்.
தமிழக வெற்றி கழக கொடி அறிமுக விழாவில் 300 நிர்வாகிகள் தான் கலந்து கொண்டார்கள் என்ற கேள்விக்கு,
வெற்றிகழக தமிழக வெற்றிக்கழக கொடி அறிமுக விழாவை காணொளி மூலம் தமிழகமெங்கும் பார்த்துக் கொண்டிருக்கிற பல கோடி பேர் சார்பாக கொடியை வெளியிடுகிறேன் என்று தான் கூறினார். 300 பேர் நிர்வாகிகள் தான் இருந்தார்கள் என்பது முக்கியமல்ல, மாநாட்டை பெரிதாக நடத்துவோம் கொடி வெளியிட்டு விழா என்பதால் எளிமையாக பண்ண வேண்டும் என்று நினைத்தோம் .
அரசு பள்ளிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கு அனுமதி மறுக்கப்படுவதாக கேட்ட கேள்விக்கு அப்படி எதுவும் இல்லை அரசு பள்ளிகளில் நலத்திட்டங்கள் வழங்குவதற்கு அரசு எந்த தடையும் செய்யவில்லை திட்டங்களை இன்று வரை செயல்படுத்திக்கிட்டு தான் இருக்கிறோம்.
தளபதி, 100% ரசிகர்களை நம்பி வரவில்லை பெண்களையும் தாய் குலங்களையும் நம்பி வந்துள்ளார். தாய்க்குலத்தின் ஆதரவில் தான் அரசியலுக்கு வந்துள்ளார். எனது வீட்டிலும் பெண்கள் குழந்தைகள் உள்ளனர். அதேபோல், அனைவர் வீட்டிலும், பெண்கள் குழந்தைகள் உள்ளனர். அவர்கள் அனைவரின் ஆதரவும் தளபதி அவர்களுக்கு தான் உள்ளது.இவ்வாறு கூறினார்.