அலங்காநல்லூர் ஐயப்பன் ஆலயத்தில் மழை வேண்டி வருண ஜெபம்
அலங்காநல்லூர் ஸ்ரீ தர்மசாஸ்தா ஆலயத்தில் உலக நன்மை வேண்டி சிறப்பு வருண ஜெபம் மற்றும் வேள்வி நடைபெற்றது;
அலங்காநல்லூர் ஸ்ரீ தர்மசாஸ்தா ஆலயத்தில் உலக நன்மை வேண்டி சிறப்பு வருண ஜெபம் வேள்வி நடைபெற்றது.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஆலயத்தில் மழை பொழிந்து முல்லைப் பெரியாறு, வைகை அணை, சாத்தையாறு அணைகள் நிரம்ப வேண்டி சிறப்பு வருண ஜெபம் வேள்வி விழா நடைபெற்றது. முன்னதாக கோவில் முன்னாடி அமைந்துள்ள தொட்டியில் தண்ணீர் நிரப்பப்பட்டு பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது.
கோவில் நிர்வாகி ஏ.எல். சீனிவாசன், முன்னிலையில் சிவாச்சாரியார்கள் தண்ணீர் தொட்டியில் இறங்கி அமர்ந்து பூஜை செய்து சிறப்பு வருண ஜெபத்தை நடத்தினர். தொடர்ந்து கோவில் வளாகத்தில் பிரதோஷ வழிபாடும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு கோவிலின் சார்பாக பூஜை பொருட்களும் அன்னதானமும் வழங்கப்பட்டது.
மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது. இருந்த போதிலும், பகலில் கடுமையான வெப்பம் நிலவுகிறது. வெப்பத்தை தணிக்கும் வகையில் ,மழை பெய்ய வேண்டி மதுரை மாவட்டத்தில் உள்ள ,ஆலயங்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. சோழவந்தான் சிவன் சுவாமி ஆலயத்தில் ,மழை வேண்டி சிவபெருமான் மற்றும் நந்திகேஸ்வரனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் பூஜைகள் நடைபெற்றது. இதே போல, மதுரை மேலமடை தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்கிய விநாயகர் ஆலயத்தில் மழை வேண்டி வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.