வாடிப்பட்டி கோட்டை கருப்பு சடையாண்டி சுவாமி கோவில் ஆடி உற்சவ விழா

வாடிப்பட்டி கோட்டை கருப்பு சடையாண்டி சுவாமி கோவில் ஆடி உற்சவ விழா மிக சிறப்பாக நடைபெற்றது.

Update: 2024-07-21 10:00 GMT

சிறப்பு அலங்காரத்தில் சடையாண்டி சாமி.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சி 18 வது,வார்டு மேட்டு நீரேத்தானில் கோட்டை கருப்பு சடையாண்டி சுவாமி கோவில் ஆடி உற்சவ விழா 3 நாட்கள் நடந்தது.

முதல் நாள் மேட்டுநீரேத்தான் மந்தையில் உள்ள கோட்டை கருப்பு கோவிலிலிருந்து காலை 8 மணிக்கு அழகு குத்தி தீர்த்த குடம், பால்குடம் எடுத்து ஊர்வலமாக புறப்பட்டு தாலுகா அலுவலகம் எதிரில், லாலா தோட்டத்தில் உள்ள சடையாண்டி கோவிலை அடைந்தது.

அங்கு சடையாண்டி சுவாமிக்கு 21 அபிஷேகங்கள், ஆராதனை அர்ச்சனைகள் செய்து சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இரண்டாம் நாள் மதியம் 2 மணிக்கு கோட்டை கருப்பு கோவிலிலிருந்து மேளதாள வான வேடிக்கையுடன் புறப்பட்டு முளைப்பாரி, பொங்கல் பானையுடன் ஊர்வலமாக சென்று சடையாண்டி கோவில் முன்பாக பொங்கல் வைத்து அபிஷேக ஆராதனை அர்ச்சனையுடன் வழிபாடு செய்யப்பட்டது.

மூன்றாம் நாள் மதியம் 12 மணிக்கு மந்தை திடலில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, உலகதேவர் பங்காளிகள் மற்றும் மேட்டுநீரேத் தான் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News