ஏழை எளிய மக்களுக்காக நகர்புற வேலைவாய்ப்பு திட்டம்: அமைச்சர் தகவல்
அனைத்து பேருட்ராட்சி பகுதியில் வசிக்கும் ஏழை எளிய மக்கள் பயன் பெரும் வகையில் இந்த திட்டம் தொடங்கபட்டுள்ளது;
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் பேரூராட்சியில் முதன்முதலாக தொடங்கிப்பட்டது. சோழவந்தான் தொகுதி வெங்கடேசன் எம்எல்ஏ தலைமை தாங்கினார். மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் சேதுராமன், பேரூராட்சித் தலைவர் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், துணை தலைவர் சாமிநாதன், உதவி செயற்பொறியாளர் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயல் அலுவலர் ஜூலான் பானு வரவேற்றார்.
வணிகவரி மற்றும் பத்திர பதிவு துறை அமைச்சர் பி.மூர்த்தி அங்குள்ள செருவன் குளத்தில், மண்வெட்டியால் வெட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.இதை த்தொடர்ந்து பேருராட்சியில் வசிக்கும் சாமர் 200க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டு இந்த குளத்தை ஆலப்படுத்தி தூர்வாரி கரையை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
இத்திட்டத்தை, தொடங்கி வைத்து அமைச்சர் மூர்த்தி பேசியதாவது: தமிழக முதலமைச்சர் அனைத்து பேருட்ராட்சி பகுதியில் ,வசிக்கும் ஏழை எளிய மக்கள் பயன் பெரும் வகையில் இந்த திட்டம் தொடங்கபட்டுள்ளது . கடந்தகால ஆட்சி போல் இல்லாமல் இப்போது நடைபெறும் நட்லாட்சியில், மதுரை மாவட்டதில் அலங்காநல்லூரில் தான் தொடங்கபட்டுள்ளது .இந்த பேருராட்சி முன்மாதியாக சிறந்த முறையில் வேலை பார்க்க வேண்டும் என்றார் அமைச்சர் மூர்த்தி.
நிகழ்ச்சியில், திமுக அவைத் தலைவர் பாலசுப்பிரமணியன் ஒன்றியச் செயலாளர் கென்னடி கண்ணன் நகரச் செயலாள்ர் ராஜேந்திரன் ,முன்னாள் தலைவர் ரகுபதி ,விவசாய அணி நடராஜன் மற்றும் பேருராட்சி அலுவர்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் இளநிலை உதவியாளர் ராஜா நன்றி கூறினார்.