நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: அமமுக சார்பில் போட்டியிட நிர்வாகிகள் விருப்ப மனு

சோழவந்தான், வாடிப்பட்டி பேரூராட்சி தேர்தலுக்கான ஆலோசனைக் கூட்டம், விருப்பமனு வழங்கும் நிகழ்ச்சி சோழவந்தானில் நடைபெற்றது;

Update: 2021-11-26 00:00 GMT

சோழவந்தானில் நடைபெற்ற அமமுக ஆலோசனைக்கூட்டத்தில் மாவட்டச்செயலரிடம் விருப்ப மனு பெற்ற நிர்வாகிகள்

 நகர்ப்புற  உள்ளாட்சித் தேர்தலுக்காக  அமமுக சார்பில் நிர்வாகிகள்  விருப்ப மனு அளித்தனர்.

மதுரை புறநகர் வடக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், சோழவந்தானில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஆலோசனை கூட்டம் மற்றும் விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மதுரை புறநகர் வடக்கு மாவட்டம், வாடிப்பட்டி ஒன்றிய கழகத்திற்கு உட்பட்ட சோழவந்தான் மற்றும் வாடிப்பட்டி பேரூராட்சி தேர்தலுக்கான ஆலோசனைக் கூட்டமும், விருப்பமனு வழங்கும் நிகழ்ச்சியும் சோழவந்தானில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மேலூர் சரவணன் தலைமை வகித்தார். கூட்டத்தில், நகர்ப்புற தேர்தலில் கழக வேட்பாளர்களின் வெற்றி வியூகங்கள் பற்றிய ஆலோசனைகளை மாவட்ட செயலாளர் மேலூர் சரவணன் வழங்கினார். தொடர்ந்து, கழகம் சார்பில் போட்டியிட விரும்புவர்கள் விருப்ப மனுக்களை மாவட்ட செயலாளரிடம் இருந்து பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், வாடிப்பட்டி ஒன்றிய செயலாளர் ராஜன், சோழவந்தான் பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்யபிரகாஷ், வாடிப்பட்டி பேரூர் செயலாளர் மதன், மேலூர் ஒன்றியச் செயலாளர் சோமாட்சி, மாவட்ட நிர்வாகிகள் மீனவர் அணி முனைவர் பாலு, விவசாய அணி முள்ளை சக்தி, இளைஞர் அணி வீரமாரி பாண்டியன், எம்ஜிஆர் மன்றம் வழக்கறிஞர் சந்திரசேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியினர் வாடிப்பட்டி ஒன்றிய பேரூர் சோழவந்தான் பேரூர் கழக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் இதில், பேரூராட்சி பகுதிகளில் போட்டியிட விரும்பும் ஏராளமான அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் விருப்ப மனுக்களை மாவட்ட செயலாளரிடம் இருந்து பெற்றுச் சென்றனர்.

Tags:    

Similar News