உளுந்தூர் காளி அம்மன் கோவில் திருவிளக்கு பூஜை: திரளான பக்தர்கள் பங்கேற்பு

சோழவந்தான் உளுந்தூர் காளி அம்மன் பங்குனி திருவிழா திருவிளக்கு பூஜை திரளான பக்தர்கள் பங்கேற்பு.

Update: 2022-04-04 12:24 GMT

சோழவந்தான் உளுந்தூர் காளி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

சோழவந்தான் உளுந்தூர் காளி அம்மன் பங்குனி திருவிழா திருவிளக்கு பூஜை திரளான பக்தர்கள் பங்கேற்பு:

மதுரை மாவட்டம், சோழவந்தான் வேளாளர் தெருவில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற உளுந்தூர் காளி அம்மன் பங்குனி உற்சவ விழா நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் செவ்வாய் கிழமை கொடியேற்றம் நடைபெற்று சாட்டுதல் உடன் விழா துவங்கியது. தொடர்ந்து, பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வந்தனர். நேற்று காலை தீர்த்தக்குடம் எடுத்து வருதல் நிகழ்ச்சியும் இரவு திருவிளக்கு பூஜையும் அதி விமரிசையாக நடைபெற்றது.

இதில், ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனர். இன்று இரவு பூச்சொரிதல் நிகழ்ச்சியும் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை காலை பால்குடம் மற்றும் அக்கினிச்சட்டி எடுத்து வருதல் இரவு சக்தி கரகம் எடுத்து வருதல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. புதன்கிழமை காலை அம்மன் ஊர்வலம் மற்றும் மாலை முளைப்பாரி ஊர்வலம் நடைபெற உள்ளது. வியாழக்கிழமை அன்னதானம் நடைபெற்று திருவிழா நிறைவு பெறும். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை, வேளாளர்தெரு பொதுமக்கள் செய்துவருகின்றனர்.

Tags:    

Similar News