அலங்காநல்லூரில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள்: இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

உதயநிதிஸ்டாலின் பிறந்தநாளையொட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது;

Update: 2021-11-27 07:00 GMT

மதுரை மாவட்டம், சோழவந்தான் தொகுதிக்குள்பட்ட அலங்காநல்லூரில் உதயநிதிஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய திமுகவினர்

அலங்காநல்லூரில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள்  கொண்டாடப்பட்டது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மகனும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், பிறந்தநாளை முன்னிட்டு, அலங்காநல்லூர் கேட்டு கடையில், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் தனராஜ், அலங்காநல்லூர் கழக கிழக்கு ஒன்றியச் செயலாளர் கென்னடி கண்ணன், கிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சந்தன கருப்பு, தலைமையில், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

இதில், நகரச் செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், மாவட்ட அவைத் தலைவர் பாலசுப்பிரமணியன்,ஒன்றிய குழு துணைத் தலைவர் சங்கீதா மணிமாறன், ஒன்றியக் கவுன்சிலர் தண்டலை சரவணன், பேரூர் இளைஞரணி வெங்கடேசன், தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் தவசதீஸ், ஜெயராமன், ஒன்றிய கலை இலக்கியப் பேரவை அமைப்பாளர் கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News