சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
சோழவந்தான் அருகே தென்கரை உச்சிமாகாளி அம்மன் கோவிலில் நடந்த திருவிளக்கு பூஜையில் ஏராளாமான பெண்கள் கலந்துகொண்டு திருவிளக்கு ஏற்றினர்.;
சோழவந்தான்:
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே தென்கரை அருள்மிகு உச்சிமாகாளி அம்மன் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 14ஆம் தேதி தொடங்கியது. விழாவின் நான்காம் நாளான நேற்று இரவு கோவில் முன்பு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் திரு விளக்கு ஏற்றி தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர் விளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்கள் அனைவருக்கும் தி பெஸ்ட் மின்னல் இளைஞர்கள்.சார்பில் எண்ணெய் திரி மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குடம் அக்னி சட்டி வருகின்ற 22ஆம் தேதி புதன்கிழமை நடைபெறுகிறது.
மதுரை அருகே சோழவந்தான் பிரளயநாத சுவாமி ஆலயத்தில், இம் மாதம் 22.ம் தேதி புதன்கிழமை நரசிம்ம ஜெயந்தியை ஓட்டி, மாலை 5.30..மணிக்கு நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகமும், அர்ச்சனைகளும் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, தொழிலதிபர் எம்.வி. மணி, கவுன்சிலர் வள்ளிமயில், கோயில் செயல் அலுவலர் இளமதி, கணக்கர் சி. பூபதி மற்றும் ஆலயப் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.