சோழவந்தான் அரசு மேல்நிலைப்பள்ளியில் மரக்கன்று நடும் விழா
சோழவந்தான் அரசுப் பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடந்தது.
சோழவந்தான் அரசன்சண்முகனார் அரசு மேல்நிலைப் பள்ளியில், மரம் நடு விழா நடந்தது.
விழாவிற்கு, சத்யா மைக்ரோ கேப்பிட்டல் நிதி நிறுவனத்தின் தலைமை மேலாளர் பார்த்திபன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமையாசிரியர் சரவணன், வர்த்தகர்கள் சங்கச் செயலாளர் ஆதி பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார மேலாளர் சரவணன் வரவேற்றார்.
சோழவந்தான் வனத்துறை வனவர் முத்து செல்வன் மரம் நடும் அவசியம் குறித்தும், அதனால் ஏற்படும் பயன் குறித்தும், ஒவ்வொருவரும் ஒரு மரம் நட வேண்டும் என்றும் வலியுறுத்தி பேசினர். ஆசிரியர்கள் உமாமகேஸ்வரி, கார்த்திக் குமார் ஆகியோர் பேசினர்.
இதைத் தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டனர். ஆலங்கொட்டாரம் கிராமமக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கினர். வட்டார மேலாளர் வினோத் கண்ணன் நன்றி கூறினார். சத்யா மைக்ரோ கேப்பிட்டல் நிதி நிறுவனத்தின் சார்பாக மரக்கன்று நடுவிழா நடந்தது.