சோழவந்தான் அருகே மரக்கன்றுகள் நடும் விழா:
சுதந்திரதின 75-வது ஆண்டு நினைவு நாளையொட்டி, சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.;
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில், இந்திய சுதந்திர தினத்தின் 75-வது ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
காடுபட்டி சாலையிலுள்ள பகுதிகளில் புங்கை மரம், வேப்பமரம் உள்ளிட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகளை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாண்டியன், ரத்தின கலாவதி, நட்டனர்.
இதில், உதவி பொறியாளர் பூம் பாண்டியன், மோகன் ஊராட்சி மன்றத் தலைவர் பழனிச்சாமி, துணைத் தலைவர் கேபிள் ராஜா, ஊராட்சிச் செயலர் மனோ பாரதி, வார்டு உறுப்பினர்கள் முள்ளை சக்தி, முனீஸ்வரி, சித்ரா இளங்கோவன், பணித்தள பொறுப்பாளர்கள் சந்திரபிரபா, சித்ராதேவி மற்றும் மன்னாடிமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் பவுன் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.