tn cm will oppose mekedatu dam construction மேகதாதுவில், அணை கட்ட தமிழக முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்: பா.ஜ.க.

tn cm will oppose mekedatu dam construction கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று, மாநில பாஜக பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் தெரிவித்தார்.;

Update: 2023-07-19 04:40 GMT

மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் சீனிவாசன்.

 tn cm will oppose mekedatu dam construction

கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று, மாநில பாஜக பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் தெரிவித்தார். மதுரையில், இதுகுறித்து மாநில பாஜக பொதுச்செயலாளர் பேராசிரியர் ராம சீனிவாசன் அளித்த பேட்டி :

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வருகின்ற போதெல்லாம் காவிரி நீர் பிரச்சனை ஏற்படுகிறது. தமிழகத்தில் கருணாநிதி முதலமைச்சராக இருந்த காலத்தில் கபினி உள்பட நான்கு இடங்களில் கர்நாடகாவில் அணை கட்டுவதற்கு சம்மதம் தெரிவித்தார்.இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் காவிரி நீர் பிரச்சினை தலைதூக்க தொடங்கியது. இந்தியாவில் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பின்பு முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் தீர்வு காணப்பட்டது .

இதைத் தொடர்ந்து, காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்சினையில் தீர்வு ஏற்படுவதற்கு மத்திய அரசு காவிரி நீர் மேலாண்மை வாரியத்தை அமைத்துள்ளது.

தமிழகத்திற்கு காவிரி தண்ணீருக்காக வேண்டுமென்றே திமுக வழக்கு தொடுக்கவில்லை. ஆனால், ரங்கநாதன் என்பவர் பொது வழக்கு தொடர்ந்தார். கடந்த 2011 ஆம் ஆண்டு மேகதாது அணை கட்டுவோம் என்று கர்நாடகா கூறிய போது அப்போதைய அதிமுக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபோது ஜெயலலிதா மீதுள்ள காழ்ப் புணர்ச்சியால் தமிழகத்திற்கு காவிரி நீரை தர மறுத்து பிரச்னை ஏற்படுத்தியது. கர்நாடகா காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில மேகதாது அணை கட்டுவோம் என்று கூறியதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.  எதிர்க்கட்சி கூட்டம் பெங்களூரில் நடைபெற்றது..

இதில், கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் மேகதாது அணை கட்டுவது தவறு என்றுசொல்லியிருக்க வேண்டும்.ஆனால் அவர் எதுவுமே பேசவில்லை. தமிழ்நாட்டில் உள்ள 66 மாவட்டங்களில் பாஜகவினர் கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பு தெரிவிக்கிறோம் .

திமுக அமைச்சர் துரைமுருகன் கூட மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால், முதல்வர் ஸ்டாலின் மேகதாது அணை குறித்து மௌனம் சாதிப்பதின் மர்மம் புரியவில்லை. எனவே, மேகதாது அணை கட்டுவதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது, மாநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன், பார்வையாளர் கார்த்திக் பிரபு, பொதுச் செயலாளர்கள் ராஜ்குமார், பாலகிருஷ்ணன் குமார்,செயலாளர்கள் சுபா நாகுலூ, பொருளாளர் நவீன அரசு ,ஊடகப் பிரி தலைவர் ரவிச்சந்திர பாண்டியன் ஆகியோர் இருந்தனர்.

Tags:    

Similar News