சோழவந்தானில் ராமநவமி விழாவை முன்னிட்டு திருக்கல்யாணம்
சோழவந்தானில் ராமநவமி விழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் நடந்தது.;
மதுரை மாவட்டம், சோழவந்தான் இரட்டை அக்ரஹாரத்தில் உள்ள சந்தான கோபாலகிருஷ்ணன் கோவில் முன்பாக அமைந்துள்ள மேடையில் சீதா கல்யாணம் விழா நடந்தது.
இவ்விழாவை முன்னிட்டு பெண்கள் மேளதாளத்துடன் சீர்வரிசை எடுத்து வந்தனர். வரதராஜ் பண்டிட் தலைமையில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடத்தி வைத்தனர். அனைவருக்கும் திருமாங்கல்ய பிரசாதம் வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து திருக்கல்யாண விருந்து நடந்தது. இவ்விழா ஏற்பாடுகளை எம் விஎம் குழுமம் மற்றும் சோழவந்தான் ராம நவமி விழா கமிட்டினர் செய்திருந்தனர். ராம் நவிமி விழாவில் எம் வி எம் மணி முத்தையா வள்ளி மயில் மற்றும் பேரூராட்சி 8வது வார்டு கவுன்சிலர் அரிமா சங்கத் தலைவர் எம்.மருது பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர். சோழவந்தான் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர்.