திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் கலைநிகழ்ச்சி

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் மாணவர்களின் கலைக்கூடல் நிகழ்ச்சி நடந்தது;

Update: 2023-08-12 14:30 GMT

திருவேடகம்  விவேகனந்த கல்லூரியில் நடைபெற்ற  கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சி

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே,திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், விவேகா நுண்கலை மன்றம் சார்பில், மாணவர்களின் கலைக்கூடல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. விவேகா நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் முனைவர் அருள்மாறன் வரவேற்புரை ஆற்றினார்.

கல்லூரி முதல்வர் முனைவர் வெங்கடேசன் தலைமையுரை ஆற்றினார்.செயலர் சுவாமி வேதானந்த, குலபதி சுவாமி அத்யாத்மனந்த மற்றும் அகத்தர உறுதி மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதீஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாணவர்கள் கலைக்கூடல் நிகழ்ச்சியில், பரதநாட்டியம், மௌன மொழி நாடகம், நாட்டுப்புறப் பாடல், காமெடி, கீபோர்ட் இசை மீட்டல், நடனம்,  நகைச்சுவை நாடகம், மெல்லிசை பாடல், பறையாட்டம் ஆகிய கலை நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்தினர்.

கல்லூரி பேராசிரியர்கள் முனைவர் எல்லைராஜா, கோபிநாத் ஆகியோர் மாணவர்களின் கலைத்திறமையை முன் நின்று ஒருங்கிணைத்தனர். விவேகானந்த குருகுல கல்லூரியின் ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் சந்திரசேகரன், இரகு,  முனைவர் காமாட்சி, தர்மானந்தம்  நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்தனர்.  வேதியியல் துறை பேராசிரியர் முனைவர் எல்லைராஜா நன்றி  கூறினார். மூன்றாம் ஆண்டு இயற்பியல் துறை மாணவர்  மாணிக்கவாசகர் யுதிஷ்டிரன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

Tags:    

Similar News