தேவர் ஜெயந்தி விழா: சாேழவந்தானில் அதிமுக, அமமுகவினர் மாலை அணிவித்து மரியாதை
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு சாேழவந்தானில் அவரது திருவுருவச் சிலைக்கு அதிமுக, அமமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.;
மதுரை அருகே சோழவந்தான் பஸ்நிலையம் அருகேயுள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்த நகர அதிமுக செயலாளர் ராஜேஸ்கன்னா, முருகேசன்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழாவை முன்னிட்டு மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவுறுத்தலின்படி, சோழவந்தானில் உள்ள தேவரின் திருவுருவச் சிலைக்கு, வாடிப்பட்டி பேரூர் அதிமுக கழக செயலாளர் ராஜேஷ் கண்ணா தலைமையில், சோழவந்தான் பேரூர் செயலாளர் முருகேசன், மகளிர் அணி செயலாளர் லட்சுமி, ஒன்றிய துணைச் செயலாளர் துரை புஷ்பம், உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இதில், வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய கழக நிர்வாகிகள் மற்றும் சோழவந்தான் பேரூர் கழக நிர்வாகிகள் தியாகு அசோக், ராமச்சந்திரன், நிஜந்தன், திருநாவுக்கரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் வாடிப்பட்டி ஒன்றிய கழக செயலாளர் ராஜன் தலைமையில், சோழவந்தான் பேரூர் கழக செயலாளர் சத்யபிரகாஷ், தேவர் சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
இதில், வாடிப்பட்டி பேரூர் கழக செயலாளர் மதன் மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள் இளைஞரணி வீர மாரி பாண்டியன் மீனவர் அணி பாலு விவசாய பிரிவு முல்லை சக்தி நிர்வாகிகள் இப்ராஹிம் சா பிடிஆர் பாண்டியன், முரளி சோழகர், திரவியம், அம்பி கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.