சோழவந்தான் காவல்நிலையத்தில் தேவர் ஜயந்தி விழா: அனைத்துக்கட்சி ஆலோசனைக் கூட்டம்

தேவர் ஜெயந்தி விழாவில் கடைப்பிடிக்க வேண்டிய அரசு விதிமுறைகள் குறித்து போலீஸார் விளக்கமளித்தனர்

Update: 2021-10-26 02:15 GMT

தேவர்ஜெயந்தி விழா தொடர்பாக  அரசியல் கட்சி, கிராமமக்களுடன் சோழவந்தான் காவல்நிலையத்தில் நடந்த ஆலோசனைக்கூட்டம்

தேவர் ஜெயந்தி விழா தொடர்பாக கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து சோழவந்தான் காவல் நிலையம் மற்றும் காடுபட்டி காவல் நிலையத்துக்கு உட்பட்ட கிராமங்களிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மற்றும் கிராமபொதுமக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவின்பேரில், சமயநல்லூர் துணை க் கண்காணிப்பாளர் பாலசுந்தர் ஆலோசனையின்படி, சோழவந்தான் காவல் நிலைய வளாகத்தில் நடந்தகூட்டத்திற்கு, போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமை வகித்தார்.சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை காவலர் உக்கிரமாபாண்டி வரவேற்றார். இக்கூட்டத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ரபீக் முகமது, முத்துப்பாண்டி, முத்தையா ஆகியோர் தேவர் ஜெயந்தி விழாவில், அரசு விதிமுறைகள் குறித்து  விளக்கிப்பேசினார்கள். தலைமைக் காவலர் சண்முகராஜன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News