தேனூர் சுந்தராஜா பெருமாள் ஆலய குடமுழுக்கு: திரளான பக்தர்கள் பங்கேற்பு
தேனூர் அருள்மிகு சுந்தரராஜ பெருமாள்( கள்ளழகர்) திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது;
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தேனூரில் உள்ள பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் (கள்ளழகர்) திருக்கோவில், அருள்மிகு விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
விழாவையொட்டி விநாயகர் பூஜையுடன் நேற்று காலை ஒன்பது மணிக்கு நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. தொடர்ந்து நேற்று மாலை விநாயகர் பூஜை வாஸ்து சாந்தி பூஜை வேத பாராயணம் மூலமந்திரம் ஹோமம் மற்றும் பூர்ணாஹூதி நடைபெற்று தீபாராதனை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து இன்று காலை ஐந்தரை மணி அளவில் கணபதி பூஜையுடன் மூன்றாம் கால யாக பூஜை நிகழ்ச்சிகள் தொடங்கின. பூர்ணாஹூதி நிறைவடைந்து. கடம் புறப்பாடாகி திருக்கோவிலை வலம் வந்து காலை சுமார் ஒன்பதரை மணி அளவில் சமகாலத்தில் சுந்தரராஜ பெருமாள் விநாயகர் கோவிலில் புனித நீர் ஊற்றப்பட்டது.
தொடர்ந்து பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து பெருமாளுக்கு பால் தயிர் நெய் வெண்ணெய் உட்பட பல வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திருக்கோவிலின் அருகே அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை பரம்பரை தர்மகர்த்தா நெடுஞ்செழிய பாண்டியன் மற்றும் பலர் செய்திருந்தனர்.