வாடிப்பட்டி அருகே கடையை உடைத்து லேப்டாப், செல்போன்கள் திருட்டு
வாடிப்பட்டி அருகே கடையை உடைத்து ரூ. 60 ஆயிரம் மதிப்பு பொருட்கள் திருட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே எல் புதூரை சேர்ந்தவர் ராஜாங்கம். இவரது மகன் ரவீந்திரன்(43).இவர் சந்தவாசல் எதிரில் செல்போன் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் இரவு 9 மணிக்கு வழக்கம் போல் கடையை அடைத்து விட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலை 9 மணிக்கு கடையை திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின் கடையை திறந்து பார்த்தபோது, உள்ளே இருந்த 8 செல்போன்கள், ஒரு லேப்டாப் ஆகியவை திருடு போனது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.60ஆயிரம் ஆகும்.
இதுகுறித்து ரவீந்திரன் கொடுத்த புகாரின் பேரில் வாடிப்பட்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி.வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.