அலங்காநல்லூர் அருகே மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை துவக்கி வைத்த எம்எல்ஏ

அலங்காநல்லூர் அருகே மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை வெங்கடேசன் எம்எல்ஏ துவக்கி வைத்தார்.

Update: 2024-08-30 10:53 GMT

மகளிர் சுய உதவி குழு கட்டிடத்தை திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன்.

அலங்காநல்லூர் அருகே மாணிக்கம்பட்டி ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை வெங்கடேசன் எம் எல் ஏ   தொடங்கி வைத்தார்.

மதுரை மாவட்டம் மதுரை அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.

மாணிக்கம் பட்டி கிராமத்தில் நேற்று நடந்த மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாமை சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். மேலும் 77 லட்சம் மதிப்பில் மகளிர் சுய உதவி குழு கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது

இந்த முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலா பாலமுருகன் தலைமை தாங்கினார்.

வடக்கு மாவட்ட திமுக அவை தலைவர் எம் ஆர் எம் பாலசுப்பிரமணியன், திமுக ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ் பரந்தாமன் ஒன்றிய சேர்மன் பஞ்சு அழகு, ஒன்றிய கவுன்சிலர் வசந்தி கலைமாறன் ஊராட்சி மன்ற துணைத் தலைவர், ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் பெரிச்சி வரவேற்றார்

இந்த முகாமில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வாழ்வாதார கடன் உதவிகள், காவல் துறை, மாற்றுத்திறனாளிகள் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, தமிழ்நாடு மின்சார வாரியம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை உள்ளிட்ட 13 துறைகளை சேர்ந்த அதிகாரிகளின் பல்வேறு சேவைகள் குறித்து தனித்தயாக அரங்கு அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு சேவைகள் வழங்கப்பட்டது.

மாணிக்கம் பட்டி, வெள்ளையம்பட்டி, டீ மேட்டுப்பட்டி, தெத்தூர் உள்ளிட்ட ஊராட்சி பகுதி பொதுமக்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகள் தொடர்பாக கோரிக்கை மனுக்களை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் தெத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் ஈஸ்வரி சீனிவாசன் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News