Tenkarai Temple Sasti Vizha தென்கரை மூலநாத சாமி கோயிலில் திருக்கல்யாணம்
Tenkarai Temple Sasti Vizha கந்த சஷ்டி திருவிழா நிறைவையொட்டி தென்கரை சுப்பிரமணியசாமி கோவிலில் திருக்கல்யாண விழா நடந்தது.;
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை மூலநாதசுவாமி ஆலயத்தில் திருக்கல்யாணம் நடந்தது.
Tenkarai Temple Sasti Vizha
தமிழகமெங்கும் கடந்த சனியன்று கந்த சஷ்டி விழா முருகன் கோயில்களில் விமர்சையாக நடந்தது.பல கோயில்களில் சூரசம்ஹார நிகழ்ச்சியும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து பங்கேற்றனர். குறிப்பாக திருச்செந்துார் கோயிலில் நடந்த சூரசம்ஹார நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நாடு முழுவதிலும் இருந்துவந்து கலந்துகொண்டனர். வெளிநாட்டு பயணிகளும் ஏராளமானோர் பங்கேற்றனர். இந்நிலையில் இதன் நிறைவு விழாவையொட்டி சுவாமிக்கு திருக்கல்யாண வைபவமான பல கோயில்களில் நடத்தப்பட்டது.
சோழவந்தான் அருகே தென்கரை அகிலாண்ட ஈஸ்வரி அம்மன் சமேத மூலநாத சுவாமி கோவில் சுப்பிரமணி சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 13 ஆம் தேதி முதல் தொடங்கி நேற்று வரை நடந்தது.நேற்று முன்தினம் மாலை சூரசம்கார விழா நடைபெற்றது.இதையொட்டி நேற்று காலை பாவாடை தரிசனம் நடந்தது சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.நேற்று மாலை இங்குள்ள கிருஷ்ணன் கோவிலில் இருந்து மேளதாளம் முழங்கவாணவேடிக்கையுடன் பெண்கள் சீர்வரிசை எடுத்து வந்தனர்.
கிருஷ்ணமூர்த்திவாத்தியார் தலைமையில் யாகவேள்வி நடந்தது.நாகேஸ்வரன் பட்டர் மாப்பிள்ளை ஆகும், விக்னேஸ்வரன் பெண்வீட்டார் ஆகவும் இருந்து முருகன் வள்ளி தெய்வானை திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர்.இதில் செயல் அலுவலர் பாலமுருகன், ஆலயப் பணியாளர்கள்,தொழிலதிபர் செந்தில்குமார் மற்றும் பிரதோஷ கமிட்டியினர்,பக்தர்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் மாங்கல்யபிரசாதம் வழங்கப்பட்டது. கல்யாணவிருந்து அன்னதானம் வழங்கினார்கள். இரவு சுவாமி அம்மன் புறப்பாடு கோவில் வளாகத்தைச் சுற்றி வந்தது. காடுபட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சோழவந்தான் பிரளயநாதர் சுவாமி கோவிலிலும் திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோவிலில் கந்தசஷ்டி நிறைவு விழா நடைபெற்றது.