சோழவந்தான் அருகே காடுபட்டி அங்காளஸ்வரி அம்மன் ஆலய கும்பாபிஷேகம்
தென்கரை அகிலாண்ட ஈஸ்வரி சமேத மூலநாதர் சுவாமி கோவில் அர்ச்சகர் தலைமையில் இரண்டு நாட்கள் யாக பூஜை நடந்தது.;
சோழவந்தான் அருகே காடுபட்டியில் உள்ள அங்காள ஈஸ்வரி மற்றும் காளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
சோழவந்தான் அருகே காடுபட்டி கிராமத்தில் உள்ள அங்காள ஈஸ்வரி மற்றும் காளியம்மன் கோவில்களில் மகா கும்பாபிஷே விழா நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு தென்கரை அகிலாண்ட ஈஸ்வரி சமேத மூலநாதர் சுவாமி கோவில் அர்ச்சகர் தலைமையில் இரண்டு நாட்கள் யாக பூஜை நடந்தது.
தொடர்ந்து யாக பூஜை நடந்து சிவாச்சாரியார்கள் மற்றும் கிராம நிர்வாகிகள் மேளதாளத்துடன் புனித நீர் குடங்களை எடுத்து கோவிலில் வலம் வந்தனர். முதலில் காளியம்மன் கோவில் கோபுரத்தில் பூஜைகள் நடந்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அங்காள ஈஸ்வரி கோவிலில் கோபுரத்திற்கு பூஜையில் நடந்து மகா கும்பாபிஷேகம் நடந்தது இங்கும் பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது .கும்பாபிஷேகத்தில் உசிலம்பட்டி முன்னாள் எம்எல்ஏ கதிரவன், வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பசும்பொன்மாறன், காடுபட்டி அதிமுக கிளை செயலாளர் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பால்பாண்டி, மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். காடுபட்டி சப்-இன்ஸ்பெக்டர் குபேந்திரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்