குருவித்துறையில் 60 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த கோயில் விழா
குருவித்துறை கிராமத்தில் 60 வருடங்களுக்கு பிறகு, மறு சீரமைப்பு செய்து மண்டகப்படி நடத்தி பேச்சியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.;
குருவித்துறை கிராமத்தில் உள்ள பேச்சியம்மன் கோவிலில் திருவிழாவில், சுவாமி திருவீதியுலா நடைபெற்றது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே, குருவித்துறை கிராமத்தில் உள்ள பேச்சியம்மன் கோவிலில் திருவிழா நடந்தது. இக்கோவிலில் 60 ஆண்டுகளுக்கு முன்பாக இத்திருவிழாவின் மண்டகப்படி நடைபெற்றுள்ளது.
பின்னர், ஏதோ சில காரணங்களால் தடைப்பட்டிருந்த மண்டகப்படி, நாகூரான் பிள்ளை மனைவி விஜயலட்சுமி குடும்பத்தார், சோலைமலை செல்வன் முருகானந்தம், சிவானந்தம் ஆகியோர் சேர்ந்து மண்டகப்படி நடத்தக்கூடிய இடத்தை மறுசீரமைப்பு செய்தனர்.
இதையடுத்து, கணபதி ஹோமம் நடத்தி பேச்சியம்மன் திருவிழாவில், இந்த ஆண்டு மண்டகப்படி நடத்தினர். அறுபது ஆண்டுகளுக்கு பின்னர் நடந்த திருவிழாவில், ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபட்டனர்.