திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் ஆசிரியர்கள் மேம்பாட்டு பயிற்சி முகாம்
மதுரை அருகே திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், அகத்தர உறுதி மையம் சார்பில் ஆசிரியர்கள் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.;
மதுரை அருகே திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், அகத்தர உறுதி மையம் சார்பில் ஆசிரியர்கள் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.
ஆங்கில துறை தலைவர் (பொறுப்பு) முனைவர் பாரதிராஜா வரவேற்புரை ஆற்றினார். முதல்வர் முனைவர் வெங்கடேசன் தலைமை உரை ஆற்றினார். செயலர் சுவாமி வேதானந்த மற்றும் குலபதி சுவாமி அத்யாத்மனந்த ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை முதல்வர் முனைவர் பார்த்தசாரதி வாழ்த்துரை வழங்கினார்.
பெங்களூர் ஆக்ஸ்போர்டு கலைக்கல்லூரியின் ஆங்கிலத் துறை பேராசிரியர் மற்றும் முதன்மை இயர் முனைவர் முருகவேல் தேசிய கல்வி கொள்கை என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். அகத்தர உறுதி மையம் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதீஷ் பாபு நன்றி உரையாற்றினார். நிகழ்ச்சியை தாவரவியல் துறை பேராசிரியர் முனைவர் குமாரசாமி தொகுத்து வழங்கினார்.