திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி
மதுரை மாவட்டம், திருவேடகம் மேற்கு விவேகானந்த கல்லூரியின் அக தர மதிப்பீட்டுக் குழுவின் சார்பாக இப்பயிற்சி நடத்தப்பட்டது;
திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் ஆசிரியர் மேம்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது
மதுரை மாவட்டம், திருவேடகம் மேற்கு, விவேகானந்த கல்லூரியின் அக தர மதிப்பீட்டுக் குழுவின் சார்பாக திங்கட்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணிவரை ‘ஆசிரியர் மேம்பாட்டு நிகழ்ச்சி’ நடைபெற்றது.
நிகழ்ச்சியின் துவக்கமாக கல்லூரியின் அகத்தர உறுதி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதீஷ்பாபு வரவேற்புரை நிகழ்த்தினார். முதல்வர் முனைவர் வெங்கடேசன் தலைமையுரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக கிருஷ்ணன்கோயில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின் உயிரி தொழிலநுட்பவியல் துறை, இணைப் பேராசிரியர் முனைவர் முத்துக்குமரன் “Training on OBE-CO, PO/PSO Attainment” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். விவேகானந்த மேனிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர் செந்தில்நாதன், வாழ்த்துரை வழங்கினார். கல்லூரியின் செயலர் சுவாமி வேதானந்த மற்றும் கல்லூரியின் குலபதி சுவாமி அத்யாத்மானந்த, கல்லூரியின் துணைமுதல்வர் முனைவர் கார்த்திகேயன், முதன்மையர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் சஞ்சீவி முன்னிலை வகித்தனர். பேராசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். நிறைவாக விலங்கியல் உதவிப்பேராசிரியர் முத்துப்பாண்டி நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்வை ஆங்கிலத்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் சரவணகுமார் தொகுத்து வழங்கினார்.
விவேகானந்தர் கல்லூரி (Vivekananda College, Madurai) என்பது தன்னாட்சிப்பெற்ற ஆடவர் கலை அறிவியல் கல்லூரி ஆகும். இது மதுரை, திருவேடகத்தில் உள்ளது. இக்கல்லூரியானது மதுரை காமராசர் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்றுள்ளது. இது 1971 இல் சுவாமி சித்பவானந்தரால் நிறுவப்பட்டது.
இக்கல்லூரியானது இராமகிருஷ்ண தபோவனத்தால் நிர்வகிக்கிறது. இந்தியாவில் பதிவுசெய்யப்பட்ட ஒரே குருகுல வாழ்க்கை கல்வி நிறுவனம் இதுவாகும். இக்கல்லூரி தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை 2014 ஆம் ஆண்டில் மீண்டும் அங்கீகாரம் பெற்றபோது கல்லூரிக்கு `ஏ 'தரத்தை (சிஜிபிஏ 3-59 / 4.00) வழங்கியுள்ளது. இது இக்னோ (இந்திரா காந்தி தேசிய திறந்த நிலைப் பல்கலைக் கழகம்) கல்வி மையத்தைக் கொண்டுள்ளது. இக்னோ வழங்கும் சான்றிதழ் திட்டங்கள் மற்றும் பட்டப்படிபுகளை கொண்டுள்ளது.
கல்லூரியில் தினசரி மூன்று கட்டாய செயல்களாக பிரார்த்தனைகள், யோகா விளையாட்டு போன்றவற்றையும், சிலம்பம், ஜிம்னாஸ்டிக்ஸ் போன்ற விருப்ப விளையாட்டுகளும் உள்ளன. இதே வளாகத்தில் விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி நரேந்திர நர்சரி பள்ளி நிர்வகிக்கிறது. மேலும் சோழவந்தானில் விவேகானந்தா மெட்ரிக்குலேசன் பள்ளியையும் நடத்தி வருகிறது,