அலங்காநல்லூர் அருகே மாணவர்கள் குடிக்க தண்ணீர் இன்றி அவதி
மதுரை அலங்காநல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட மேட்டுப்பட்டி ஊராட்சி துவக்கப்பள்ளியில் மாணவர்கள் குடிப்பதற்கு தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர்.;
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியத்திற்குடபட்ட 15 .பி மேட்டுப்பட்டி ஊராட்சி துவக்கப் பள்ளி இரண்டு ஓட்டு கட்டடங்களில் 25 மாணவர்களுடன் செயல்படுகிறது.
இரண்டு சமையல் கட்டிடம் இங்கு பராமரிப்பின்றி மேற்கூரை சுவர் சிமென்ட் பூச்சு பெயர்ந்து இடிந்து விழும் சூழலின் அபாய கட்டத்தில் உள்ளது.
மேலும் இங்கு மழை காலங்களில் மாணவர்கள் அமர்ந்து படிக்கும்போது மழை நீர் மேலே விழும் சூழல் உள்ளது. அங்கன்வாடி கட்டிடம் இடிக்கப்பட்டது. இங்கு குடிநீர் தொட்டி பழுதடைந்து இரண்டு ஆண்டுகள் ஆகிறது. இதனை இதுவரை யாரும் கண்டுகொள்ளவில்லை.
தற்போது மாணவர்கள் அங்கன்வாடி மாண்வர்கள் பயில்வதால் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் தண்ணீர் தர ஏற்பாடு செய்ய வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மாணவர்களின் நலனில் அக்கரை கொண்டு இங்கு கட்டிடம் சீரமைக்கப்பட்டு குடிநீர் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்று மாணவர்கள் வழியுறுத்துகின்றனர். மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசும், மதுரை மாவட்ட ஆட்சியரும் விரைந்து நடவடிக்கை எடுக்க கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இல்லை எனில் மேட்டுப்பட்டி பகுதிவாழ் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.