உலக மக்கள் தொகை நாள் : சோழவந்தானில் மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி
உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு சோழவந்தானில் மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
மதுரை :
சோழவந்தான் அருகே ராயபுரம் தனியார் பள்ளியில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே ராயபுரம் கல்வி சர்வதேச பொதுப்பள்ளியில் "உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு சிபிஎஸ்இ மாணவர்களின் "விழிப்புணர்வு பேரணி"நடைபெற்றது.
இந்தப் பேரணியானது சோழவந்தான் பேருந்து நிலையத்திலிருந்து வட்டப் பிள்ளையார் கோவில், ஜெனகை மாரியம்மன், கோவில் தபால் அலுவலகம் வரை பேரணியாக வந்தனர். இதில் 150 ற்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் ஜூடி, உதவி தலைமை ஆசிரியர் அபிராமி, ஒருங்கிணைப்பாளர்கள் சுபா மற்றும் .ரெய்ஹானா பேகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பேரணியில் மான. மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பங்கேற்றனர். முன்னதாக சோழவந்தான் தலைமை அரசு மருத்துவ அதிகாரி தீபா மற்றும் சமூக ஆர்வலரும் கல்வி வாய்ஸ் துணைப் பொது மேலாளருமான பிரேமலதா உறுதி மொழி ஏற்றுத் துவக்கி வைத்தார்கள்.
உலக மக்கள்தொகை தினத்தில் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துதல், எந்தக் குழந்தையாக இருப்பினும் சமமான உரிமை அளித்து வளர்ப்பது போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ஜூலை மாதம் 11ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.