திருவேடகம்; விவேகானந்தா கல்லூரியில் நடந்த தேசிய இளையோர் தின விழாவில் மாணவர்கள் உற்சாகம்!

திருவேடகம், விவேகானந்த கல்லூரியில் நடந்த தேசிய இளையோர் தினம் விழாவில் மாணவ மாணவியர் உற்சாகமாக பங்கேற்றனர்.

Update: 2024-01-13 10:26 GMT

திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் தேசிய இளையோர் தின விழா நடைபெற்றது.

மதுரை அருகே, திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், வழிபாட்டு மண்டபத்தில், சுவாமி விவேகானந்தரின் 161வது பிறந்தநாள் தேசிய இளைஞர் எழுச்சி தினமாக கொண்டாடப்பட்டது.

சுவாமி விவேகானந்த படிப்பகத்தின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் வரலாற்று துறை உதவிப் பேராசிரியர் முருகன் வரவேற்ப்புரை ஆற்றினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் டி. வெங்கடேசன் தலைமை உரையில் “அச்சம் தவிர்” என்ற வாக்கிற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவர் சுவாமி விவேகானந்தர் என்பதை எடுத்துரைத்தார். கல்லூரியின் குலபதி சுவாமி அத்யாத்மானந்த விவேகானந்தரின் பன்முகத்தன்மைகளை எடுத்துரைத்தார்.

கல்லூரி செயலர் சுவாமி வேதானந்த முன்னிலை வகித்தார். மூன்றாம் ஆண்டு வரலாற்று துறை மாணவர் இராஜா "நரேந்திரனின் இளமைப்பருவம்" என்ற தலைப்பிலும் இரண்டாம் ஆண்டு வரலாற்று துறை மாணவர் ஜெய்குரு "தமிழ்நாட்டில் விவேகானந்தர்" என்ற தலைப்பிலும் உரையாற்றினர்.  நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தனராக விவேகானந்த கல்லூரியின் மேனாள் வரலாற்று துறை தலைவர் முனைவர் நாகேந்திரன் "ஶ்ரீ விவேகானந்தர் ஜீவிதம்" என்ற தலைப்பில் சிந்தனையை துண்டும் சிறப்புரை ஆற்றினார்.


                          திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் தேசிய இளையோர் தின விழா கருத்தரங்கம் நடந்தது.

தமிழ் துறை உதவி பேராசிரியர் முனைவர் கோ.பாலமுருகன் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் கே. கார்த்திகேயன், முதன்மையர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் ஜெய்சங்கர், அகத்தர உறுதி மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர். ஏ. சதீஷ் பாபு, துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் என அனைவரும் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்றனர். வரலாற்று துறை உதவிப் பேராசிரியர் குமரேசன் நன்றி உரை ஆற்றினார்.

Similar News