சோழவந்தான் அருகே சூறை காற்றுடன் மழை: வீட்டின் மீது மரம் விழுந்து 3 பேர் படுகாயம்

சோழவந்தான் அருகே சூறாவளி காற்றுடன் பெய்த கனமழைக்கு முள்ளிகுளத்தில் வீட்டின் மீது மரம் விழுந்து 3 பேர் படுகாயம்.

Update: 2022-05-02 11:41 GMT

முள்ளிப்பள்ளம் விநாயகபுரம் காலனியில், பனைமரம் முறிந்து வீட்டின் மீது விழுந்ததில் அமிர்தம் அவரது மகன்கள் பாண்டி பிரகாஷ் மற்றும் பாண்டித்துரை ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

சோழவந்தானில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழைக்கு மரம் விழுந்து 3 பேர் படுகாயம்: மின்தடையால் முதலுதவி சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்படுவதாக பணியாளர்கள் புலம்பல்:

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே சூறாவளி காற்றுடன் பெய்த கனமழைக்கு முள்ளிப்பள்ளத்தில், வீட்டின் மீது மரம் விழுந்து மூன்று பேர் படுகாயம் அரசு மருத்துவமனையில் அனுமதி.

மதுரை மாவட்டம், சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று திடீரென சூறாவளி காற்றுடன் கூடிய பேய் மழை பெய்தது. இதனால், சுமார் 10க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் பனை, புங்கை மரங்கள் ஆலமரம் உள்ளிட்டவை ஒடிந்து விழுந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்தியது . முள்ளிப்பள்ளம் விநாயகபுரம் காலனியில், மிக நீண்ட பனைமரம் ஒடிந்து வீட்டின் மீது முழுவதுமாக விழுந்தது. இதனால், வீட்டில் இருந்த அருள் என்பவரின் மனைவி அமிர்தம் அவரது மகன்கள் பாண்டி பிரகாஷ் மற்றும் பாண்டித்துரை இருவரும் பலத்த காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக, சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு நேற்றிரவு சென்றபோது, மருத்துவமனையில் மின்சாரம் இல்லை. ஜெனரேட்டர் வசதியும் இல்லை.

இதனால், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள். பின்பு, டார்ச்லைட் மூலம் அடிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, தொடர்ந்து, உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். மின்சாரம் தடைபடும் காலங்களில், மருத்துவமனையிலும் மின்தடை ஏற்படுகிறது. இதனால், உள் நோயாளிகள் மற்றும் புறநோயாளிகள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு உடனடியாக ஜெனரேட்டர் வசதி செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Tags:    

Similar News